/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: செயல்களால் போதித்தவர்!
/
கவிதைச்சோலை: செயல்களால் போதித்தவர்!
PUBLISHED ON : செப் 28, 2025

அக்., 02 - தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பிறந்த தினம்
டி.வி.ராமசுப்பையர்
மகத்தான மாண்பின் மறு உருவம்
குமரி மண்ணில் பிறந்த குல விளக்கு
'தினமலர்' தந்து தேசம் உயர்த்தியவர்
கல்வி வெளிச்சம் கண்டு மகிழ்ந்தவர்!
தமிழர்களின் தலைமை தீரர் புகழ் பின்னே ஓடாத புண்ணியவான்
தியாகங்களுக்கு தயங்காத
திடமான கண்ணியவான்
காலப்பெட்டகத்தில் நிலைத்த
புகழ்மிகு பொக்கிஷம்!
ஜாதி மத பேதம் தகர்த்த பெரியவர்
சமுதாய ஒற்றுமைக்கு வித்திட்டவர்
தீண்டாமை நீக்கி மனிதம் உயர்த்தி
நானிலம் ஒளிரச் செய்த நல்லவர்!
ஏழை எளியோர் முன்னேற வழிகாட்டி
தேடித் தேடி கற்கும் கல்வியே
வாழ்வின் ஆணிவேரென உணர்த்தி
நீதி நெறியோடு வாழ்ந்தவர்
அனைவரையும் குடும்பமாய் நேசித்த
ஈடு இணையற்ற பண்பாளர்!
பத்திரிகை உலகில் புத்தம் புது பாதை அமைத்தவர்
'தினமலர்' எனும் நறுமலரால்
உண்மையை உரக்கப் பகிர்ந்தவர்
தமிழகமெங்கும் பதிப்புகள் நிறுவி
தமிழ் பணியால் பெருமை பெற்றவர்!
அறிவையும் உழைப்பையும்
இரு கண்களாய் மதித்தவர்
எதிர்த்து பகை சம்பாதிக்காமல்
எல்லாரின் நலனுக்காக
அரசோடு கைகோர்த்துக் கொண்டு
நினைத்ததை முடித்து வென்றவர்!
கற்பனைக்கு எட்டாத சாதனைகளை
அசாதாரணமாக செய்து காட்டிவிட்டு
அடக்கத்தைக் கைக்கொண்டவர்
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திட
தன் மதிப்புமிகு செயல்களால்
எல்லாருக்கும் போதித்தவர்!
- வ.முருகன், விழுப்புரம்.தொடர்புக்கு: 97156-40263