/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!

கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!

கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!

கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!

கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!

PUBLISHED ON : பிப் 15, 2026


Google News
Latest Tamil News
* கற்க கற்க

கற்கண்டு போல் இனிக்கும்

கல்லாதார் வயிற்றை

கனல்மூட்டி எரிக்கும்

அமுதம் மட்டுமல்ல தமிழ்

அமிலமும் ஆகும்

எங்கள் தமிழ்!

* படிக்க படிக்கப்

பாகுபோல் சுவைக்கும்

படிக்காதார் வாய்க்குப்

பாகற்காய் போல் இருக்கும்!

* வாசிக்க வாசிக்க

வாய் ஊறும்

வாசிக்கப் பழகிவிட்டால்

நாக்கு தித்திக்கும்

தமிழமுதம் பருகப் பருகப்

பஞ்சாமிர்தம் போலாகும்!

* உள்ளங்கையில் நெல்லிக்கனி

உள்ளதுபோல் கன்னித்தமிழ்

கற்பது கடினமில்லை

கற்றுத் தெரிந்துவிட்டால்

விட்டு விலக வழியில்லை!

* கேட்டால் காதில் தேன்பாயும்

கேட்காதார் காதில் சீழ்வடியும்

மாங்கனி பலா வாழை என

மூன்று கனியும் சேர்ந்த

முத்தமிழ் எங்கள்

தமிழ்மொழியாகும்!

* ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஆடல் பாடல் இயல் இசை

நாடகம் நாட்டியம் நடனம்

அறுபத்து நான்கு கலையும் தமிழ்!

* சிந்திக்க வைத்திடும் செந்தமிழ் பழகப்பழகப் பிடித்திடும் பைந்தமிழ்

சங்கம் வளர்த்த

செம்மொழி தமிழ்!

* தீந்தமிழ் தேன்மொழித் தமிழ் அருந்தமிழாம் அன்னைத் தமிழாம்

எங்கள் உலகத்

தாய்மொழி தமிழே!



- கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி. மொபைல்: 80988 50514