தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: அகன்று போய்விடும்!

கவிதைச்சோலை: அகன்று போய்விடும்!

கவிதைச்சோலை: அகன்று போய்விடும்!


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகன்று போய்விடும்!

பொறாமை குடிபுகும் மனதில்

உழைப்பும் தேடலும்

அகன்று போய்விடும்!

ஆத்திரம் குடிபுகும் மனதில்

அன்பும் மனிதமும்

அகன்று போய்விடும்!

பேராசை குடிபுகும் மனதில்

திருப்தியும் நிம்மதியும்

அகன்று போய்விடும்!

பொய்மை குடிபுகும் மனதில்

உண்மையும் நம்பிக்கையும்

அகன்று போய்விடும்!

ஆணவம் குடிபுகும் மனதில்

பணிவும் மரியாதையும்

அகன்று போய்விடும்!

சோம்பல் குடிபுகும் மனதில்

முயற்சியும் ஊக்கமும்

அகன்று போய்விடும்!

வெறுப்பு குடிபுகும் மனதில்

கருணையும் இரக்கமும்

அகன்று போய்விடும்!

சுயநலம் குடிபுகும் மனதில்

பகிர்வும் பெருந்தன்மையும்

அகன்று போய்விடும்!

அச்சம் குடிபுகும் மனதில்

துணிவும் தன்னம்பிக்கையும்

அகன்று போய்விடும்!

வஞ்சகம் குடிபுகும் மனதில்

நேர்மையும் நல்லெண்ணமும்

அகன்று போய்விடும்!

அவசரம் குடிபுகும் மனதில்

நிதானமும் தெளிவும்

அகன்று போய்விடும்!

நற்குணம் குடிபுகும் மனதில்

துக்கமும் துயரமும்

அகன்று போய்விடும்!



- ஆர்.செந்தில்குமார், மதுரை.

தொடர்புக்கு:9597781744

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us