
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் உள்ளவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன். அம்மாவுக்கு வயது 40, மகனுக்கு 17. கல்லுாரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார், மகன். மகனுடன் கல்லுாரியில் அதே வகுப்பில் படித்து வருகிறார், தாய் பூர்ணிமா.
எர்ணாகுளம் கோதமங்கலம், 'மார் அத்தனேஷியஸ்' கல்லுாரியில் தான், இருவரும் பயின்று வருகின்றனர்.
திருமணத்துக்கு பின், படிப்பை தொடர முடியாமல் விட்டு விட்டார், பூர்ணிமா. பல ஆண்டுகளுக்கு பின், கல்லுாரியில் சேர்ந்து பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட, தன் இளைய மகனை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பெரிய மகனுடன் கல்லுாரிக்கு சென்று வருகிறார்.
— ஜோல்னாபையன்

