
'என்னது கரும்பா? அதை கடிச்சு மென்று துப்புறதுக்குள்ள வாய் வலிக்குமே...' என்று புலம்புபவரா நீங்கள்? கரும்பால் என்னென்ன பலன்கள் இருக்குன்னு தெரிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்.
* கால்ஷியம், குரோமியம், புரோட்டீன், வைட்டமின்ஸ், மக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் இரும்பு சத்துன்னு கரும்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் இருப்பவர்கள் அடிக்கடி கரும்பைக் கடித்து சாப்பிடலாம்
* செரிமானம் மற்றும் சருமப் பொலிவு இவற்றுக்கெல்லாம் உதவியா இருப்பதோடு, உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், குறையவும் கரும்பு சாப்பிடலாம்
* கரும்புச் சாற்றில் இருக்கும் புரோட்டீன், கிட்னி செயல்பாட்டுக்கும், கிட்னியில் கற்கள் வராமல் தடுக்கவும் பயன்படுவதோடு, 'யூரினரி இன்பெக்ஷன்' வராமலும் தடுக்கும். தாகத்தை சட்டுன்னு தணிக்கும், 'நேச்சுரல் எனர்ஜி டிரிங்க்ஸ்' கரும்பு தான்
* ஆலும் வேலும் போலத்தான், கரும்பும் பல்லுக்கு உறுதி சேர்க்கும். அதனால், வலுவான பல்லுக்கு உத்தரவாதம் வேணும்ன்னா, அடிக்கடி கரும்பைக் கடிக்கலாம்
* ரத்தத்தில் உள்ள, 'ஹீமோகுளோபின்' அளவை மேம்படுத்துற சக்தி கரும்புக்கு உள்ளது. அதனால, 'ஜூஸா' சாப்பிறதோட, கடிச்சு மென்று சாப்பிட்டோம்ன்னா, சத்துக்கள் எதுவும் வீணாகாமல் மொத்தமாக கிடைக்கும்.

