
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சில சமயம் அதிக சூடு காரணமாக நரம்புகள் இழுத்துக் கொண்டு, தசைகள் சுருங்கும், வலிக்கும். தசைப்பகுதிகளை அழுத்தி, 'மசாஜ்' செய்தும், சூடான டவல்களை வைத்துக் கட்டியும் இதை சமாளிக்கலாம்
*வீட்டுக்குள்ளே நல்ல காற்று வர, ஜன்னல்களையெல்லாம் திறந்து வையுங்கள். அறைக்குள் காற்று பரவ மின் விசிறியை ஓட விடுங்கள்
* பழங்களில் மாம்பழம் சாப்பிடலாம். எலுமிச்சை, ஆரஞ்சு மாதிரி சிட்ரஸ் சத்து உள்ள பழங்கள் உடலில் வறட்சி ஏற்படாமல் காக்கும்
* கோடைக் காலத்தில் காலை நேர நடைப்பயிற்சி தவிர, கடினமாக உடலைப் பாதிக்காத பயிற்சிகளில் ஈடுபடுங்கள்
*நீச்சல் குளத்தில் போய் குளிப்பவரா? சுத்தமான தண்ணீரான்னு பார்த்துக் குளிக்கவும். தண்ணீர் மோசமாக இருந்தால், உடலில் சரும பாதிப்பை ஏற்படுத்தும்.

