PUBLISHED ON : செப் 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்டல ஊரக வங்கிகளில் (ஆர்.ஆர்.பி.,) காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆபிஸ் அசிஸ்டென்ட் 7972, ஆபிசர் பிரிவில் ஜெனரல் 854, சீனியர் மேனேஜர் 199, ஐ.டி., 87, சி.ஏ., 69, சட்டம் 48, விவசாயம் 50 உட்பட மொத்தம் 13,217 இடங்கள் (தமிழகத்தில் 688) உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு / சட்டம் / அக்ரிகல்சர் / சி.ஏ.,
வயது: 18- 28, 18 - 30, 21 - 32 (21.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் பிரிலிமினரி, மெயின் தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை உட்பட 18 இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 21.9.2025
விவரங்களுக்கு: ibps.in