PUBLISHED ON : அக் 21, 2025

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை ஆவடியில் உள்ள இன்ஜின் தொழிற்சாலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் மேனேஜர் பிரிவில் டிசைன், டெவலப்மென்ட் 6, குவாலிட்டி 3, மார்க்கெட்டிங் 1, பாதுகாப்பு 1, சட்டம் 1, உற்பத்தி 1, அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் மெக்கானிக்கல் 7 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ
வயது: 18-40 (31.10.2025ன் படி)
ஒப்பந்த காலம்: இரண்டாண்டு
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager, Engine Factory, Avadi, Chennai - 600 054
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.10.2025
விவரங்களுக்கு: ddpdoo.gov.in