/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடி தோட்டத்திலும் குண்டு திப்பிலி
/
மாடி தோட்டத்திலும் குண்டு திப்பிலி
PUBLISHED ON : நவ 19, 2025

குண்டு திப்பிலி சாகுபடி குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாடித் தோட்ட பராமரிப்பாளர் கே.கவிதா கூறியதாவது:
மாடி தோட்டத்தில், கத்திரி, தக்காளி ஆகிய நாட்டு ரக காய்கறி வகைகள் மற்றும் திப்பிலி, மிளகு, துளசி உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகளை சாகுபடி செய்து வருகிறேன்.
இந்த மூலிகை சாகுபடியின் வாயிலாக, தலைக்கு தடவுவதற்கு எண்ணெய் உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்து, கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.
அந்த வரிசையில், மாடி தோட்டத்தில் குண்டு திப்பிலி சாகுபடி செய்து வருகிறேன்.
விரல் நீளத்திற்கு இருக்கும் திப்பிலியை காட்டிலும், குண்டு திப்பிலியில் காரத்தன்மை அதிகமாக இருக்கும்.
மாடி தோட்டம் மற்றும் மூலிகை சாகுபடி பொருத்தவரையில், மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால் மட்டுமே, அதிக வருவாய் ஈட்ட முடியும்.
அதற்கேற்ப, தோட்ட பராமரிப்பாளர்கள் சந்தை படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.கவிதா,
88708 00021.

