sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 வாக்குறுதி திட்டங்களில் தகுதியற்ற பயனாளிகளை நீக்க அரசு ஆலோசனை

/

 வாக்குறுதி திட்டங்களில் தகுதியற்ற பயனாளிகளை நீக்க அரசு ஆலோசனை

 வாக்குறுதி திட்டங்களில் தகுதியற்ற பயனாளிகளை நீக்க அரசு ஆலோசனை

 வாக்குறுதி திட்டங்களில் தகுதியற்ற பயனாளிகளை நீக்க அரசு ஆலோசனை


ADDED : மார் 02, 2026 05:05 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: வாக்குறுதி திட்டங்களுக்கு, அதிகமான பணம் செலவிடுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதால், தகுதியற்ற பயனாளிகளை நீக்கிவிட்டு, செலவை குறைக்க மாநில அரசு ஆலோசிக்கிறது.

கடந்த 2023ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது.

அதே ஆண்டு தாக்கல் செய்த துணை பட்ஜெட்டில், இத்திட்டங்களுக்காக 35,410 கோடி ரூபாய் செலவிட்டது. 2024 - 25ம் நிதியாண்டில், 56,000 கோடி ரூபாய், 2025 - 26ல் 51,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

செலவு குறைப்பு பட்ஜெட்டில் பெரும் பகுதி நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்துவதால், வளர்ச்சி பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.

திட்டங்களுக்கு அதிகமாக செலவிடுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதை ஆளுங்கட்சியினரே ஆமோதிக்கின்றனர்.

இதை தீவிரமாக கருதிய மாநில அரசு, தகுதியற்ற பயனாளிகளை நீக்குவதன் மூலம், செலவை குறைக்க முடிவு செய்துள்ளது.

'சக்தி' திட்டத்தின் கீழ், தினமும் 70 முதல் 75 லட்சம் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். ஆனால் போலி ஆவணங்கள் பயன்படுத்துகின்றனர்.

ஒரே ஆதார் கார்டு காண்பித்து, பெண்கள் பயணிக்கின்றனர். இதற்கு தீர்வு காண, ஸ்மார்ட் கார்டு நடைமுறையை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும்.

'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், 4.21 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தினால் பயனடையும் 20 சதவீதம் பயனாளிகள், தகுதியானவர்கள் அல்ல என்பதை, உணவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

நான்கு லட்சம் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. ஐந்து கிலோ அரிசிக்கு பதிலாக துவரம் பருப்பு, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்து, செலவை குறைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தகுதியற்றவர்கள் 'கிரஹ லட்சுமி' திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வருமான வரி செலுத்துவோர், இறந்தவர்களின் கணக்குக்கும் பணம் செலுத்தப்படுவதால், அரசு கருவூலத்துக்கு சுமை அதிகரிக்கிறது. தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்படுகின்றனர். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.

அதே போன்று இலவச மின்சாரம் வழங்கும், 'கிரஹஜோதி' திட்டத்திலும், முறைகேடுகள் நடப்பதை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வாக்குறுதி திட்டங்கள் சுமை என்றாலும், மக்களுக்கு பெரிதும் உதவுகின்றன. சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிரஹ லட்சுமி திட்டத்தின் உதவித்தொகையும் பெண்களுக்கு உதவுகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதை அரசும் உணர்ந்துள்ளது.

எனவே திட்டங்களை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். திட்டங்களில் மாற்றங்கள் செய்து, செயல்படுத்த ஆர்வம் காட்டுகிறார்.






      Dinamalar
      Follow us