ADDED : மார் 01, 2026 05:21 AM

அ நிறம் | அளவு
பெலகாவி: சிக்கோடியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.யு., மாணவி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவின் பம்பலவாடா கிராமத்தை சேர்ந்தவர் பூமிகா, 17. இரண்டாம் ஆண்டு பி.யு., படித்து வருகிறார். நேற்று தேர்வு துவங்கியதால், காலையில் வீட்டில் குளியல் அறையில் குளித்து விட்டு வெளியே வந்தவர், திடீரென மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அவரின் பெற்றோர், உடனடியாக மகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தேர்வு பயத்தாலா அல்லது உடல் நலம் பாதித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா என்பது குறித்து தெரியவில்லை.
இச்சம்பவத்தால் பெற்றோர் மட்டுமின்றி, கிராமத்தினரும் வேதனை அடைந்தனர்.
