sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பரபரப்பு இல்லாத விதான் சவுதா 'வெறிச்'

 பரபரப்பு இல்லாத விதான் சவுதா 'வெறிச்'

 பரபரப்பு இல்லாத விதான் சவுதா 'வெறிச்'


ADDED : ஜூன் 01, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சித்தராமையா முதல்வர் பதவியை, ராஜினாமா செய்ததால், கவர்னர் சட்டசபையை கலைத்துள்ளார். இதனால் அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், விதான் சவுதா வெறிச்சோடி காணப்படுகிறது.

பெங்களூரின் விதான் சவுதா, நாள் முழுதும் பரபரப்பாக தென்படும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் நடமாட்டம் இருக்கும். கட்சி தொண்டர்கள், கூட்டம், கூட்டமாக வருவர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, பொது மக்களும் அதிக எண்ணிக்கையில் வருவர். பேச்சும், சத்தமுமாக விதான்சவுதா களைகட்டி இருக்கும். ஆனால் இப்போது சூழ்நிலை தலை கீழாக மாறியுள்ளது.

சித்தராமையா ராஜினாமா அறிவித்ததால், கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கலைந்த உத்தரவு வெளியான பின், விதான்சவுதாவுக்கு உயர் அதிகாரிகள், பொது மக்கள் வருகை குறைந்தது.

அலுவலக ஊழியர்கள், விதான்சவுதா, விகாஸ் சவுதாவில் உள்ள அமைச்சர்களின் அலுவலகம் முன்பாக இருந்த பெயர் பலகைகளை அகற்றினர். அலுவலகத்துக்கும் பூட்டு போட்டனர்.

அதிகமான வேலை இல்லாத காரணத்தால், ஊழியர்கள் அரட்டை அடித்து பொழுது போக்குகின்றனர். எப்போது புதிய முதல்வர் பதவியேற்பார், யார், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், எந்த அமைச்சருக்கு எந்த துறை கிடைக்க கூடும் என, பேசி கொள்கின்றனர்.

தற்போது, விதான் சவுதா வெறிச்சோடி காணப்படுகிறது. சிவகுமார் முதல்வராக பதவியேற்ற பின், விதான்சவுதா, விகாஸ் சவுதாவுக்கு பழையபடி பரபரப்பாக மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us