/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'பாதரசத்தை தங்கமாக மாற்றலாம்' மாரத்தான் பியூஷன்
/
'பாதரசத்தை தங்கமாக மாற்றலாம்' மாரத்தான் பியூஷன்
ADDED : ஜூலை 23, 2025 10:53 PM

சான் பிரான்சிஸ்கோ:அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாத ரசத்தை தங்கமாக மாற்ற முடியும் என, அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மாரத்தான் பியூஷன் தெரிவித்து உள்ளது.
மேலும் கூறியுள்ளதாவது:
இரண்டு ஹைட்ரஜன் ஐசோடோப்புகளான டிரிட்டியம் மற்றும் டியூட்ரியம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் போது, அதிக திறன் வாய்ந்த நியூட்ரான் எனப்படும் ஹீலியம் உருவாவது, அணுக்கரு இணைவு எனப்படுகிறது. இதனுடன் குறிப்பிட்ட பாதரசம் -198 ரகத்தை மோதச் செய்யும் போது, பாதரசம் - 197 ரகமாக மாறும்.
அந்த அணுக்கள், அடுத்த சில நாட்களில் நிலையான தங்கமாக மாற்றமடையும். புதிய தொழில்நுட்பத்தில், ஒரு கிகாவாட் திறன் கொண்ட பியூஷன் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 5,000 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இருப்பினும், தங்க ஐசோடோப்புகளில் சில கதிரியக்க தாக்கம் இருக்கும் என்பதால், 18 ஆண்டுகள் வரை அவற்றைப் பயன்படுத்தாமல், தனியாக சேமித்து வைக்க வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

