/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சதுரங்கம் ஜூலை 6ல் துவக்கம்
/
மாநில சதுரங்கம் ஜூலை 6ல் துவக்கம்
ADDED : ஜூன் 28, 2025 01:36 AM
சென்னை:வண்டலுாரில் உள்ள கிரசென்ட் பல்கலையில், மாநில அளவிலான சதுரங்க போட்டி, ஜூலை 6ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு மற்றும் செங்கல்பட்டு சதுரங்க சங்கத்தின் ஆதரவில், ஜி.டி., செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான சதுரங்க போட்டி, ஜூலை 6ம் தேதி, வண்டலுாரில் உள்ள கிரெசன்ட் பல்கலை வளாகத்தில் நடத்துகிறது.
இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சதுரங்க வீரர்களும் பங்கேற்கலாம். வயது வரம்பு கிடையாது.
ஒவ்வொரு ரவுண்டும், 40 நிமிடம், 'ராபிட்' அடிப்படையில் நடக்க உள்ளது. முதல் ரவுண்டு காலை 9:00 மணிக்கு துவங்கும்.
வெற்றி பெறும் முதல் 20 வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு 95001 98748 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.