ADDED : செப் 01, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகர் சி.ஐ.டி., நகரில் உள்ள இரண்டாவது குறுக்கு தெருவில் 60 குடியிருப்புகள் உள்ளன. அதேபோல், சீனிவாச தெருவில் 70 குடியிருப்புகள் உள்ளன.
இரு தெருக்களிலும் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடை ந்து, அதில் கழிவுநீர் கலக்கிறது. இதற்கு தீர்வு காண, சி.ஐ.டி., நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், 250 மீ., சீனிவாசா தெருவில் 275 மீ., பழைய குழாய்களை அகற்றி, புதிதாக டி.ஐ., இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி, 45 லட்சம் ரூபாயில் நடந்து வருகிறது.