/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டமிட்ட ெஹலிகாப்டர்; எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி
/
வட்டமிட்ட ெஹலிகாப்டர்; எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி
ADDED : நவ 05, 2024 08:44 PM
வால்பாறை ; வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், பசுமை மாறாக்காடுகள், வன விலங்குகள் அதிகம் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இப்பகுதியில், 'ட்ரோன்' பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக வால்பாறையில் அதிகாலை நேரத்தில் ெஹலிகாப்டர் ஒன்று தாழ்வாக சுற்றி சுற்றி வந்தது. இதை கண்ட எஸ்டேட் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.
வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கேரளவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் மூணாறு பகுதியில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். தமிழக, கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், இந்தப்பகுதியிலும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதற்காக மத்திய, மாநில அரசுகளிடம் அந்த நிறுவனம் முறையாக அனுமதி பெற்றுள்ளனர். வால்பாறையில் ெஹலிகாப்டர் இறங்க ெஹலிபேடு இல்லாததால், மூணாறில் இருந்து வால்பாறைக்கு வந்து படம் எடுத்து சென்றனர்,' என்றனர்.