/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'தினமலர்' நாளிதழை போலவே வினியோகிப்பவரிடமும் நேர்மை
/
'தினமலர்' நாளிதழை போலவே வினியோகிப்பவரிடமும் நேர்மை
'தினமலர்' நாளிதழை போலவே வினியோகிப்பவரிடமும் நேர்மை
'தினமலர்' நாளிதழை போலவே வினியோகிப்பவரிடமும் நேர்மை
ADDED : ஆக 01, 2025 07:49 AM

கோவை:
கோவை சிங்காநல்லுார் பகுதியில், தினமலர் நாளிதழ் வினியோகம் செய்து வருபவர் மகாமுனி. இவர், சிங்காநல்லுாரில் உள்ள தியாகி சண்முகா நகர் அபார்ட்மென்டுக்கு, தினமலர் நாளிதழ் வினியோகம் செய்ய சென்றுள்ளார்.அப்போது அந்த அபார்ட்மென்ட் காம்பவுண்டுக்குள், இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் தரையில் கிடந்துள்ளன.
அதை எடுத்த அவர், அங்கு வசிக்கும் முத்துகுமாரசாமி என்பவரிடம் கொடுத்து, ''இது யாருடைய பணம் என தெரியவில்லை. உங்கள் காம்பவுண்டுக்குள் கிடந்தது. விசாரித்து கொடுத்து விடுங்கள்,'' என கூறி பணத்தைக்கொடுத்து விட்டு சென்று விட்டார்.
இது குறித்து, முத்துகுமாரசாமி கூறுகையில், ''எங்கள் அபார்ட்மென்டுக்கு பல வருஷமாக, இவர் பேப்பர் போடுகிறார். பணம் குறித்து விசாரித்து, உரியவரிடம் கொடுத்து விட்டேன். இந்த காலத்தில் இப்படியும் நேர்மையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை, பார்க்கும் போது வியப்பாக உள்ளது. எங்கள் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், அவரை அழைத்து பாராட்ட இருக்கிறோம்,'' என்றார்.