/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்; கோடையை சமாளிக்க அறிவுரை
/
அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்; கோடையை சமாளிக்க அறிவுரை
அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்; கோடையை சமாளிக்க அறிவுரை
அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்; கோடையை சமாளிக்க அறிவுரை
ADDED : ஏப் 03, 2025 11:49 PM
பெ.நா.பாளையம்; கோடை காலத்தின் பாதிப்பிலிருந்து உடலை, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
மதிய நேரங்களில், வெப்ப நிலை அதிகமாக இருக்கும் காலங்களில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களிலிருந்தும் தற்காத்துக் கொள்வதால், கோடைகால அலர்ஜி நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
கோடைகாலத்தில் அதிக அளவான வெப்பநிலை நிலவும்போது, நம்முடைய உடல் தன்னைத்தானே குளிர்விக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் பலனளிக்காத நிலையில் மயக்கம், உணர்விழப்பு, வெப்ப வாதம் ஏற்படுகின்றன.
உடல் அதிகமாக சூடாகும்போது, அதில் இருந்து தற்காத்துக் கொள்ள வேர்வையை அதிகமாக சுரக்க செய்து, அதன் வாயிலாக உடலின் வெப்பத்தை தணிக்க முயற்சி நடக்கும். உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டால், நாக்கு வறண்டு போதல், சிறுநீர் அடர் மஞ்சளாக வெளியாகுதல், தசைப்பிடிப்பு, தலை சுற்றல், கை கால் தளர்வு ஏற்படுகின்றன.
இதை தவிர்க்க தினமும், 4 லிட்டர் வரை நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை பருக வேண்டும். இது தவிர, இளநீர், மோர், பழச்சாறு அருந்தலாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது உப்பு, சர்க்கரை கரைசல் அருந்துவது நல்லது.
செயற்கை குளிர்பானங்களை தவிர்த்தல் நல்லது. மயக்கம், நினைவு இழத்தல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது என்றனர்.