/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்த்தாய் ஆய்வு கூடம் அமைக்க மனு கொடுத்து பா.ஜ. வலியுறுத்தல்
/
தமிழ்த்தாய் ஆய்வு கூடம் அமைக்க மனு கொடுத்து பா.ஜ. வலியுறுத்தல்
தமிழ்த்தாய் ஆய்வு கூடம் அமைக்க மனு கொடுத்து பா.ஜ. வலியுறுத்தல்
தமிழ்த்தாய் ஆய்வு கூடம் அமைக்க மனு கொடுத்து பா.ஜ. வலியுறுத்தல்
ADDED : அக் 31, 2025 11:59 PM

பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில் பழங்கால கல்வெட்டுகளை பாதுகாக்க தமிழ்த்தாய் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்,' என பா.ஜ. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவினர், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பா.ஜ. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் அன்பழகன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில நிர்வாகிகள் சார்பில், தமிழ்த்தாய் ஆய்வுக்கூடம் அமைக்க வலியுறுத்தி பொள்ளாச்சி சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமியிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்கால கல்வெட்டுகள், நடுகல், முதியோர் தாழி, அரிய பொக்கிஷங்கள் உள்ளன. மலையாண்டிப்பட்டிணம், நாட்டுக்கல்பாளையம், ஆனைமலை பகுதிகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றை முறையாக பராமரிக்காததால் சிதறண்டு கிடக்கிறது. இவற்றை பராமரிக்க பொள்ளாச்சி நகர பகுதியை மையமாக கொண்டு தமிழ்த்தாய் ஆய்வுக்கூடம் அமைக்க அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் கூறுகையில், ''திராவிட மாடல் அரசு, தமிழ், சங்க, பக்தி இலக்கியங்களை அழித்து வருகிறது. தமிழையும் அழித்து வருகின்றனர். இவை பாதுகாக்கப்பட வேண்டும்.
சரித்திர புகழ் வாய்ந்த இடங்கள், பொக்கிஷங்களை பாதுகாக்க ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்,'' என்றார்.

