/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லூரி மாணவர்களை குறி வைத்து மோசடி: விழிப்புணர்வு பெற போலீசார் அறிவுரை
/
கல்லூரி மாணவர்களை குறி வைத்து மோசடி: விழிப்புணர்வு பெற போலீசார் அறிவுரை
கல்லூரி மாணவர்களை குறி வைத்து மோசடி: விழிப்புணர்வு பெற போலீசார் அறிவுரை
கல்லூரி மாணவர்களை குறி வைத்து மோசடி: விழிப்புணர்வு பெற போலீசார் அறிவுரை
ADDED : நவ 01, 2025 12:00 AM
நெகமம்: கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று வட்டார பகுதியில், மாணவ, மாணவியரை குறிவைத்து பணம் பறிக்கும் மோசடி கும்பலால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல வழிகளில் பண மோசடிகள் நடக்கிறது. தற்போது புதிதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை குறி வைத்து 'ஸ்காலர்ஷிப்' என்ற பெயரில் நூதன மோசடியில் ஈடுபட்டு கும்பல் பணம் பறிக்கிறது.
தற்போது இந்த கும்பல் கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை குறி வைத்து பணம் பறிக்க துவங்கியுள்ளது.
மாணவ, மாணவியரின், கல்வி விபரங்களை வைத்து அவர்களை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, 'படிக்கும் கல்லூரி பெயர், கோர்ஸ் விபரங்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கின்றனர். உண்மை தகவல்களை கூறுவதால், போனில் பேசுபவர்களை நம்பி பேச்சை தொடர்கின்றனர்.
அதன்பின், உங்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் 'ஸ்காலர்ஷிப்' வழங்க உள்ளோம் என கூறி, மொபைல்போனுக்கு கியூ.ஆர்., கோடு அனுப்புகின்றனர். அதை ஸ்கேன் செய்து, ஸ்காலர்ஷிப் தொகையை டைப் செய்து பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.
இதை நம்பி சில மாணவ, மாணவியரின் பெற்றோர்களும், அந்த கியூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்கின்றனர். உடனே பேங்க் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை 'அபேஸ்' செய்கின்றனர். அதன்பிறகே, மோசடி செய்யப்பட்டதை பெற்றோரும், மாணவ, மாணவியரும் உணர்கின்றனர். தற்போது, இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
மாணவர்களுக்கு, 'ஸ்காலர்ஷிப்' தருகிறோம், கியூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்யுங்கள் என மொபைல்போன் அழைப்புகள் வந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற மோசடிகள் குறித்து, பல்வேறு வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், போனில் பேசுபவர்களின் வார்த்தை ஜாலத்தில் நம்பி, உடனுக்குடன் செயல்பட்டு, பணத்தை இழக்கின்றனர்.
இதுபோன்று வேறு ஏதேனும் மொபைல்போன் அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

