/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை பொன்விழா
/
அரசு மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை பொன்விழா
அரசு மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை பொன்விழா
அரசு மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை பொன்விழா
ADDED : மே 27, 2025 12:08 AM
கோவை; கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறையின், 50 ஆண்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
கடந்த, 1975ம் ஆண்டு நான்கு படுக்கைகளுடன் துவங்கப்பட்ட இத்துறை தற்போது பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
இத்துறையில்ஆண்டுதோறும் நுண் துளை அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை உட்பட, 98 பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சைகளும், 1,208 குழந்தைகள் அறுவை சிகிச்சைகளும், 2,010 சிறு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
துறை துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, மருத்துவமனையில் நடந்த விழாவில், துறையின் வளர்ச்சிக்கு உதவியவர்களை கவுரவிக்கும் விதமாக பொன்விழாவும், அறிவியல் கருத்தரங்கும் நடைபெற்றது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி பங்கேற்றார். துறையை, 1975ம் ஆண்டு துவங்கிய மூத்த பேராசிரியர் டாக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் உரையாற்றினர்.
டீன் நிர்மலா, மருத்துவக் கண்கானிப்பாளர் டாக்டர் கண்ணதாசன், துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.