/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சர்க்கரை நோய்: ஏழை சிறுவர்களுக்கு உதவி
/
சர்க்கரை நோய்: ஏழை சிறுவர்களுக்கு உதவி
ADDED : ஆக 23, 2024 04:55 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 118 ஏழை சிறுவர்களுக்கு 25 வயது வரை பயன்படுத்தும் இன்சுலின் மருந்து,நீடில்,சர்க்கரை நோய் அளவிடும் கருவி,குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்களை'இதயங்கள்' அமைப்பினர் இலவசமாக வழங்கினர்.
தமிழகத்தில் சர்க்கரை நோயால் 20 ஆயிரத்திற்கு மேலான 1 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் 4 முறை இன்சுலின் மருந்தை தங்கள் உடலில் செலுத்துதல்,சர்க்கரை அளவை சரிபார்த்தல் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். இதை செய்யாவிடில் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னையில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் . இவர்களுக்கு உதவும் விதமாக கோவை 'இதயங்கள்'அமைப்பை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணன்சுவாமிநாதன்,தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளை நாடி முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 1 வயது முதல் 25 வயது வரை பயன்படுத்தும் இன்சுலின் மருந்து,நீடில்,சர்க்கரை சரிபார்க்கும் கருவி,மருந்துகள் கெட்டுப்போகாமல் இருக்க குளிர்சாதன பெட்டியை இலவசமாக வழங்குகின்றனர். இதோடு 24 மணி நேரமும் ஆலோசனையும் வழங்குகின்றனர்.
அதன்படி இந்த அமைப்பினர் திண்டுக்கல்லில் நோயால் பாதிக்கப்பட்ட 118 ஏழை சிறுவர்கள்தேர்வு செய்தனர். இவர்களில் 65 பேருக்கு முதல் கட்டமாக இன்சுலின் மருந்துகள்,4.எம்.எம்.நீடில்,100 குளுக்கோஸ் ஸ்டிப்,சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவிகள்,37 பேருக்கு குளிர்சாதன பெட்டிகளை இலவசமாக வழங்கினர். திண்டுக்கல்லில் நடந்த இதற்கு டீன் சுகந்திராஜகுமாரி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி,துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு,இதயங்கள் அமைப்பு நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன்சுவாமிநாதன்,டாக்டர் முரளிதரன் பங்கேற்றனர். பங்கேற்ற சிறுவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை,தைராய்டு அளவு,சீறுநீரக பரிசோதனை போன்றவைகளை செய்தனர். மீதமுள்ள சிறுவர்களுக்கு மருந்துகள் உள்ளிட்ட உபகரணங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.