/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கி., குட்கா பறிமுதல்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கி., குட்கா பறிமுதல்
ADDED : ஆக 01, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து - - துாத்துக்குடிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த ரயில் நேற்று காலை திண்டுக்கல் வந்தவுடன் சோதனை செய்தனர்.
முன்பதிவு இல்லாத பெட்டியில் 2 பைகளில் இருந்த 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை கடத்தியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

