ADDED : நவ 02, 2024 01:32 AM
அ நிறம் | அளவு
உலக சேமிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையம், நவ. 2-உலக சேமிப்பு தினத்தையொட்டி, குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில், சேமிப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு உண்டியல் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது. விடியல் ஆரம்பம் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''பணத்தேவை கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். அத்துடன், எதிர்காலத்திற்கான சேமிப்பும் மிக முக்கியம்,'' என்றார்.
