/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தர்பூசணியை பயமின்றி சாப்பிடலாம் தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்
/
தர்பூசணியை பயமின்றி சாப்பிடலாம் தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்
தர்பூசணியை பயமின்றி சாப்பிடலாம் தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்
தர்பூசணியை பயமின்றி சாப்பிடலாம் தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்
ADDED : ஏப் 01, 2025 12:33 AM

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில், 4,455 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பழங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலும் கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், பூண்டி,சோழவரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள், தர்பூசணி பழங்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
தர்பூசணி பழங்கள் சிகப்பாக இருக்க ஊசி போன்ற மருந்துகள் செலுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் சுட்டிக்காட்டி வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து விற்பனை குறைந்தது.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், தர்பூசணி சாகுபடி செய்யப்படும் விவசாயிகளின் வயல்களில், திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஜெபகுமாரி அனி மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பழங்களின் தரத்தை ஆய்வு செய்தனர்.
பழங்களில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஊசி போடப்படுவதில்லை. இயற்கையாகவே பழங்களில் தேவையான நிறமும், சுவையும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தினர். மேலும், தர்பூசணி பழங்களின் ஊசி செலுத்த முற்படும்போது, பழங்கள் தன்மையை இழந்து உடனடியாக கெட்டுவிடும்.
எனவே, பழங்களில் எந்தவிதமான கலப்படமும் செய்யப்படுவதில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
கோடைகாலங்களில் உடலுக்கு குளிர்ச்சியையும், பல்வேறு விதமான நன்மைகளையும் தரும் தர்பூசணி பழங்களை எந்தவித பயமும் இன்றி உண்ணலாம் என, ஜெபகுமாரி அனி தெரிவித்துள்ளார்.

