ADDED : நவ 01, 2025 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:பெரவள்ளூரை சேர்ந்தவர் நாகராஜன், 48. வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் துறையில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம், செந்தில் நகர் சிக்னல் அருகே, 200 அடி சாலையில், ரமேஷ் என்ற காவலருடன் ரோந்துப் பணியில் இருந்தார்.
அப்போது, தேவர் ஜெயந்திக்காக, 'டி.என்., 07 பி.எஸ்., 7153 எக்ஸ்யுவி' ரக காரில், ஒரு கும்பல் வந்தது. அந்த காரை நாகராஜன் நிறுத்திய போது, காரை ஓரமாக நிறுத்துவது போல் பாசாங்கு செய்த கார் ஓட்டுநர், காரை நிறுத்தாமல், நாகராஜனை அவதுாறாக பேசிவிட்டு சென்றனர்.
காருக்கு பின்னால், பைக்கில் வந்தவர்களை நிறுத்திய போது, அவர்கள் கத்தியை காட்டி, 'காலி செய்து விடுவேன்' என மிரட்டி விட்டு சென்றனர்.

