/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியரசு தின விழா அறிவியல் நிகழ்ச்சி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
/
குடியரசு தின விழா அறிவியல் நிகழ்ச்சி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
குடியரசு தின விழா அறிவியல் நிகழ்ச்சி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
குடியரசு தின விழா அறிவியல் நிகழ்ச்சி; பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 20, 2025 11:01 PM
உடுமலை; உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனை போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், 75வது குடியரசு தின நிறைவு விழாவையொட்டி, 75 சிறப்பு நிகழ்வுகள் நடத்த அறிவித்துள்ளனர்.
இதன் படி, ஜன., 25, 26ம் தேதிகளில் மைவாடி பிரிவு விவேகானந்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில், '75 பள்ளிகள் 75 மாணவர்கள் 75 அறிவியல் பரிசோதனைகள்' என்ற தலைப்பில் 75 நிமிடங்கள் சிறப்பு நிகழ்வு நடக்கிறது.
இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும், இஸ்ரோவின் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. சிறந்த அறிவியல் சோதனைகளுக்கு, சிறப்பு அறிவியல் சார்ந்த பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நிகழ்வுகள் நடக்கிறது. ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, இணையவழி மற்றும் நேரடி போட்டிகள் நடக்கிறது.
இணையவழியில் கட்டுரைப்போட்டி, கவிதை, வினாடிவினா, திருக்குறள் வினாடிவினா, சிறுகதை எழுதும் போட்டி, ஸ்லோகன் கூறுதல், வாக்காளர் தின ஸ்லோகன் போட்டிகள் நடைபெறுகிறது.
நேரடியாக கிண்டர் கார்டன் வகுப்புகள் முதல், ஐந்தாம் வகுப்பு வரை மாறுவேடப்போட்டி, ஒன்று முதல் ஐந்து, ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மூன்று பிரிவுகளில் ஓவியப்போட்டிகள், பள்ளி மாணவர்கள் அனைவருக்கான அறிவியல் சோதனைகள் செய்வது உள்ளிட்டப் போட்டிகள், 25ம்தேதி நடக்கிறது.
குடியரசு தினத்தன்று, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இசைக்கருவி வாசித்தல், பேச்சுப்போட்டி, நெருப்பு இல்லாமல் சமைப்பது, பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிட்ட போட்டிகள் நேரடியாக நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், இணையவழி போட்டிகளில் பதிவு செய்வதற்கும் கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.