டிரம்பை எதிர்த்து நிற்க முடியாத மோடி: ராகுல் தாக்கு
டிரம்பை எதிர்த்து நிற்க முடியாத மோடி: ராகுல் தாக்கு
ADDED : ஆக 06, 2025 11:03 AM

புதுடில்லி: ''பிரதமர் மோடி, அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் குறித்தான அமெரிக்காவின் விசாரணை காரணமாக, அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் தன்னுடைய தலையீட்டால் தான் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பிரதமர் மோடி, இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களும் மறுப்பு தெரிவித்த நிலையில், டிரம்பை கண்டித்து பார்லி.,யில் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியிருந்தார். ஆனால், பிரதமர் மோடி, டிரம்பின் பெயரை குறிப்பிடாமல், எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பதிலடி கொடுத்தார்.
டிரம்பின் பெயரை நேரடியாக உச்சரிக்காமல் பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால் அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்தப் போகிறேன்,'' என எச்சரித்துள்ளார் டிரம்ப். 25 சதவீத வரி விதிப்பை பிரதமர் மோடியோ, வெளியுறவு அமைச்சரோ இதுவரை கண்டனம் தெரிவிக்காத நிலையில், அதனை மேலும் உயர்த்தப்போவதாகவும் எச்சரித்துள்ள டிரம்பை கண்டிக்காததை ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ராகுலின் பதிவு: