sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்

/

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்

64


UPDATED : ஜூலை 21, 2025 11:37 AM

ADDED : ஜூலை 21, 2025 10:00 AM

Google News

UPDATED : ஜூலை 21, 2025 11:37 AM ADDED : ஜூலை 21, 2025 10:00 AM

64


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.பி., மற்றும் முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜாவை நீக்கி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார். பின்னர் அவர் தி.மு.க.,வில் இணைந்தார்.

அ.தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த அன்வர் ராஜா, 2021 ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, அ.தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.

அ.தி.மு.க., அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமானா அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.,வின் அனைத்து உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டு உள்ளார். 2019ல் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து அன்வர் ராஜா பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி வைத்ததால், அன்வர் ராஜா அதிருப்தி வெளிப்படுத்தி இருந்தார். தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜ., கால் ஊன்ற முடியாது என்று அண்மையில் அன்வர் ராஜா பேட்டி அளித்தார். அவரது பேட்டி அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.,வில் ஐக்கியம்

பின்னர், சென்னையில் உள்ள தி.மு.க., வின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பா.ஜ., கையில் அ.தி.மு.க., !

தி.மு.க.,வில் இணைந்த பிறகு, அன்வர் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான தலைவர் யாருமில்லை. நிச்சயமாக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார். அவருக்கு இணையான தலைவர் இனி வருவார்களா என்பது சந்தேகம் தான். இ.பி.எஸ்., தான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை; அதனை இ.பி.எஸ்., உறுதிப்படுத்த முடியவில்லை.
அ.தி.மு.க.,வை அழித்து, தி.மு.க.,வுடன் மோத நினைக்கிறது பா.ஜ.. அண்ணாதுரையின் கொள்கைக்கு எதிராக அ.தி.மு.க., செல்கிறது. என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ஜ., கையில் அ.தி.மு.க. சிக்கி உள்ளது. கருத்தியல் ரீதியான பயணத்திற்கு என்னை இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி. இந்தியா-பாக் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
அதேபோல், நான் தான் முதல்வர் என்று இ.பி.எஸ்., கூறுவது உள்ளது. ஹிந்தி எதிர்ப்பு பேராட்ட காலத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். பா.ஜ, என்பது ஒரு எதிர்மறையான சக்தி அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அன்வர் ராஜா கூறினார்.








      Dinamalar
      Follow us