
'இது பூமதி எனும் மகளின் கதை' என்றாலும், இவள் இக்கதையின் துவக்கம் அல்ல; தொடர்ச்சி...
புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து 15 கி.மீ., தொலைவில், சீமை கருவேல மரங்கள் மண்டிய மண்பாதை தான் கீழ்க்குடி கிராமத் திற்கான வழி. அங்கு, சுடுமண் சிலை கலையில் பல தலைமுறைகளாக ஈடுபட்டிருக்கும் மெய்ய நாதன் குடும்பத்தின் 26 வயது வாரிசு... பூமதி!
மண்ணும் மகளும்
மெய்யநாதன் - காந்திக்கு இரண்டு மகள் கள்; மகன் பிறந்த பின்னர் கடைக்குட்டியாக பிறந்த பூமதியின் மரபணுக்களில் முன்னோர் களின் கலை ஞானம் கலந்திருக்க, ஐந்து வயதி லேயே ஓவியம், மண்சிலை சார்ந்த கூறுகள் மீது அவருக்கு ஈர்ப்பு வருகிறது!
'கண்மாய்களில் இருந்து நான் களிமண் வெட்டி எடுப்பதையும், அதில் உமி கலந்து வடிக்கும் சிலைகளை சூளையில் சுடுவதையும் பார்த்து வளர்ந்த என் பூமதி, 10ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் 426; பிளஸ் 2வில் 959!' - மகளின் சாதனை சொல்கையில் மெய்யநாதன் முகத்தில் பெரும் பூரிப்பு.
'நல்ல மார்க் எடுத்துட்டு நீ ஏன் தாயி இந்த களிமண்ணை குழப்பிட்டு கிடக்குறே!' - தந்தை யின் இந்த வருத்தம், இயற்பியல் துறை மேற் படிப்பில் பூமதி சேர காரணமாகிறது!
இங்கே ஒரு டுவிஸ்ட்
பூமதியின் சகோதரிகள் திருமணத்திற்காக வாங்கிய கடன் மலைப்பாம்பாக குடும் பத்தை இறுக்க, பூமதியின் மனதில் பாடங்கள் பதியவில்லை.
'நான் படிப்பை விடுறது உனக்கு வலிக்கும்னு தெரியும்; ஆனா, நீ கஷ்டப்பட்டு உழைச்சு தர்ற என் காலேஜ் பீஸ் 3,000 ரூபாயை நான் வீணாக்குறேன்னு தோணுதுப்பா!' - கல்லுாரி யில் சேர்ந்த ஒரேமாதத் தில் பூமதி மனதில் இப்படி ஓர் சஞ்சலம்!
'சிலை பண்ணிடலாம்யா; ஆனா, அதை வியாபாரம் பண்ண அவளுக்கு பக்குவம் இருக்குதா' - கீழ்க்குடி கண்மாய்களில் புரணி பேச்சு கரை புரண்டு கொண்டிருக்க, கால டி யில் மிதிபடும் களிமண் சிலையாகும் விதத்தில் பூமதியை வேகமாய் செதுக்கத் துவங்கி இருந்தது காலம்!
அந்த ஒரு மின்னல்
பிரபலங்களின் மண்சிலை, காலம் சென்ற வர்களின் மண்சிலை என கடவுள் உருவங் களை கடந்து பூமதியின் விரல்கள் கலை வடித் துக் கொண்டிருந்த ஓர்நாள், கீழ்க்குடியை கரு மேகம் சூழ்ந்து கொண்டிருந்தது. 'பளிச்'சென்று வானில் ஒரு மின்னல்; அதேதருணம், 'நாம் ஏன் நம் படைப்புகளை யு டியூப், இன்ஸ்டாகிரா மில் பதிவிடக்கூடாது' என பூமதியின் மனதிற் குள்ளும் ஒரு மின்னல்.
இன்று, சமூக வலைதள விற்பனை உதவி யால், தந்தையின் கடன் தொகையில் நான்கு லட்ச ரூபாயை குறைத்தாயிற்று! மண் சிற்ப கண்காட்சிக்கு வரச்சொல்லி ஸ்பெயினில் இருந்தும், பணி யில் சேரச்சொல்லி சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்தும் அழைப்பு வந்தும் அதனை நிராகரித்து...
மெய்யநாதனோடு முற்றுப் பெற்றிருக்க வேண்டிய தலை முறை கதைக்கு, 'தொடரும்...' போட்டிருக்கிறார் இந்த அன்பு மகள்.