/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அதென்ன 'நிகர பூஜ்ஜியம்' கட்டுமானம்? விளக்குகிறார் இந்திய கட்டுனர் வல்லுனர் துணை தலைவர்
/
அதென்ன 'நிகர பூஜ்ஜியம்' கட்டுமானம்? விளக்குகிறார் இந்திய கட்டுனர் வல்லுனர் துணை தலைவர்
அதென்ன 'நிகர பூஜ்ஜியம்' கட்டுமானம்? விளக்குகிறார் இந்திய கட்டுனர் வல்லுனர் துணை தலைவர்
அதென்ன 'நிகர பூஜ்ஜியம்' கட்டுமானம்? விளக்குகிறார் இந்திய கட்டுனர் வல்லுனர் துணை தலைவர்
ADDED : மே 31, 2025 04:34 AM

குறைந்த எரிசக்தியை பயன்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செய்யக்கூடிய ஆற்றல் வாயிலாக, தேவையை பூர்த்தி செய்யும் கட்டடங்கள்தான், 'நெட் ஜீரோ' கட்டடங்கள்.
இதுகுறித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க கோவை மைய துணை தலைவர் பிரசாத் சக்கரவர்த்தி கூறியதாவது:
சமீபகாலமாக, புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். வரும் காலங்களில் புவி வெப்பமயமாதலை தவிர்ப்பதற்கு, நிகர பூஜ்ஜியம் கட்டடங்கள் அவசியமாகிறது.
கட்டுமான தேவைக்காக இயற்கை அழித்துவந்த நிலையில், தற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்த கட்டுமான முறையால் காற்று மாசு, கார்பன் வெளியீடு, மின் நுகர்வு குறைக்கப்படும்.
உலக மொத்த உமிழ்வுகளில், 50 சதவீதம் வாயுக்கள் கட்டடங்களில் இருந்து வெளிப்படுகின்றன. ஒரு கட்டடம் எவ்வளவு ஆற்றலை உட்கொள்கிறதோ, அதே அளவு ஆற்றலை உருவாக்கி பயன்படுத்தும்போது, அந்த கட்டடம் பசுமை பராமரிக்கும் கட்டடமாக மாறுகிறது.
ஆற்றல் மிக்க கட்டடங்களை வடிவமைக்க, பல காரணிகள் உள்ளன. கட்டடங்களில் ஆற்றல் மேலாண்மை அமைப்புகள் அவசியமானவை. இடம், சூரிய ஒளி, காலநிலை, காற்றின் வேகம், மழையளவு ஆகிய சில காரணிகளையும், கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆற்றல் தேவைகளை சரி செய்ய, இயற்கை வளங்களை பயன்படுத்துவது ஒரு சிறந்த வழிமுறை. சூரிய சக்தி, காற்றழுத்த சக்தி போன்ற மீள்சுழற்சி ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும்.
மாசு குறைந்த கட்டுமானம், இயற்கை வளங்களை பாதுகாக்க உதவுகிறது. கார்பன் அடுக்கும் குறைப்பதால், புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும்.
ஒரு கட்டடம் சொந்த தேவைக்கேற்ப, ஆற்றல் உற்பத்தி செய்யும்போது, 'நிகர பூஜ்ஜியம்' நிலையை அடைய முடியும். வசதியான சூழலையும் ஏற்படுத்தும்.
இவ்வாறு, அவர் கூறினார்.