தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முதுமையில் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் 3 விஷயங்கள்

முதுமையில் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் 3 விஷயங்கள்

முதுமையில் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் 3 விஷயங்கள்


PUBLISHED ON : அக் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: செரிமான பிரச்னை தான் முதியவர்களின் மிகப்பெரிய உடல் தொந்தரவு. சரியான உணவு முறையால், இந்த தொந்தரவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் நவமணி.

''முதியவர்களுக்கான உணவு முறை, எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாக இருப்பதோடு, தசை, எலும்புகளை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாகவும் இருப்பது அவசியம். இதற்கு சில சத்துக்கள் தினசரி உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்கிறார் அவர்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

* அதிக சர்க்கரை உள்ள பழங்கள்: நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா, வாழைப்பழம் போன்ற அதிக இனிப்பு நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.

* அமில உணவுகள் (புளிப்பு/காரம்): மூட்டு வலி மற்றும் தசை வலிகளை அதிகப்படுத்தும் வத்தக்குழம்பு, புளியோதரை போன்ற அதிக புளிப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* உப்பு, கொழுப்புச்சத்து: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஊறுகாய், கருவாடு, அப்பளம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு குறைக்க வேண்டும். அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவு தவிர்ப்பதும் நல்லது.

எப்படி சாப்பிடுவது?

ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடாமல், ஒரு நாளைக்கு 5 முதல் 6 முறை சிறிய அளவுகளாகப் பிரித்து சாப்பிட வேண்டும். எளிதில் செரிக்கும் இட்லி, இடியாப்பம், கஞ்சி, காய்கறி சூப், பருப்பு சாதம் போன்ற ஆவியில் வெந்த மென்மையான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தாகம் எடுக்காவிட்டாலும் கூட, தினமும் 1.5 - 2 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதயம், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே நீரின் அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

வயதானவர்களுக்கு சில உணவு சாப்பிட்டால் ஒவ்வாமை, அலர்ஜி பாதிப்பு ஏற்படலாம். அவற்றை தவிர்ப்பதோடு, உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம், உணவு சார்ந்த சந்தேகங்களை கேட்கலாம்.

சரிவிகித உணவு, ஓய்வு, நல்ல மனநிலைதான், முதுமையில் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் தாரக மந்திரம்.

முதியவர்களுக்கான 'டயட் பிளான்'

* புரதம்: தசை பலவீனத்தை தவிர்க்க பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து போன்ற பருப்பு வகைகள், காளான், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சோயா ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

* கால்சியம், வைட்டமின் டி: எலும்புகள் வலுப்பெற ராகி, பால், தயிர், மோர் மற்றும் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். தினசரி 15 நிமிடம் இளம் வெயில் உடலுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* நார்ச்சத்து: மலச்சிக்கல் பிரச்னையைத் தவிர்க்க, முழு தானியங்கள், ஓட்ஸ், காய்கறி, கீரைகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும்.

* பழங்கள்: ஆப்பிள், கொய்யா, மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை காலை 11:00 மணி அல்லது மாலை 4:00 மணியளவில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us