நுரையீரலை பலப்படுத்தும் 'தாளிசாதி கர்ப்ப சூரணம்!'
நுரையீரலை பலப்படுத்தும் 'தாளிசாதி கர்ப்ப சூரணம்!'
PUBLISHED ON : நவ 23, 2025

ஆஸ்துமா நோயால் பல ஆண்டுகள் சிரமப்படுபவர்கள், சைனஸ் தொந்தரவு, சைனஸ் தலைவலி, மூக்கில் சதை வளர்ச்சி, மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் தொடர்ந்து இருப்பது, இது போன்று நுரையீரல் சார்ந்து வரக்கூடிய எந்த நோயையும் விரட்டக்கூடியது தாளிசாதி கர்ப்பச் சூரணம். இது, என் தயாரிப்பு; வெளியில் எங்கும் கிடைக்காது.
பவளம், சிருங்கி, முத்துச்சிப்பி, தாளிசாபத்திரி, லவங்கம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், செண்பக மொக்கு, லவங்கபத்திரி, ஏலக்காய், அதிமதுரம், சதைக்குப்பை, கருஞ்சீரகம், ஜாதிக்காய், திருநாகப் பூ, ஓமம் உட்பட 28 வகை மூலப்பொருட்கள் உள்ளன.
இதை, மருத்துவரின் ஆலோசனையுடன் வயதுக்கு தக்கவாறு சாப்பிடலாம். வாத நோய் கள் 80, பித்த நோய்கள் 40, சிலேத்தும நோய் எனப்படும் கபம் சார்ந்த 96 வகை முக்குற்ற நோய்களையும் குணப்படுத் தும் ஆற்றல் இதற்கு உண்டு. இது தவிர, செரிமான, தோல் சார்ந்த பிரச்னைகளும் குணமாகும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
ஒரு வயதிற்கு மேல் 50 மி.கிராம், ஒரு சிட்டிகை, 6 வயதுக்கு மேல் 250 மி.கி., 12 வயதிற்கு மேல் அதிகபட்சம் 4 கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிடலாம்.
தொடர்ந்து, 48 நாட்கள், மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு ஆண்டு வரையிலும் நோயின் தீவிரத்தை பொருத்து சாப்பிடலாம்.
@block_B@ டாக்டர் காமராஜ் சாமியப்பன், சித்த மருத்துவர், மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அதிகாரி, திருச்சி. 0431 - 2300181, 94898 20113 drkaamaraaj@gmail.com@@block_B@@

