PUBLISHED ON : ஆக 31, 2025

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ? என்ற பழமொழி சித்த மருத்துவத்தில் உள்ளது. அந்த அளவிற்கு மனிதர்களோடு ஒன்றிய தாவரம் ஆவாரை.
கோவையில் நண்பரின் இறுதி சடங்கிற்கு சென்றிருந்தேன். அவரின் உடலை தகனம் செய்வதற்கு முன், அவரின் நினைவாக ஆவாரம் செடியை நட்டு வைத்தார்கள். மறைந்தவரின் நினைவாக ஆவாரம் செடி நடும் பழக்கம் தென் தமிழகத்திலும் உள்ளது. இந்த ஆவாரம் பூ சர்க்கரையை எப்படி கட்டுப்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. சென்னையில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஆப் பேசிக் மெடிக்கல் சயின்ஸ் என்ற அடிப்படை ஆய்வுகளை செய்யும் மருந்து நிறுவனம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இரண்டும் இந்த ஆய்வை விரைவாக செய்துள்ளன.
காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, ஆவாரை டீ குடிக்கலாம். ஏதாவது ஒரு வகையில் உடலுக்கு பயன் அளிக்கக் கூடியதான, மருத்துவ குணம் நிரம்பிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஜப்பன் நாட்டின் கியோடோ பல்கலைக் கழகம் வலியுறுத்துகிறது.
குறைந்தபட்சம் காலையில் குடிக்கக் கூடிய பானத்தை செம்பருத்தி டீ, வெறும் தேயிலை, சுக்கு மல்லி காபி, நீராகாரம் என்று மாற்றிக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
டாக்டர் ஜி.சிவராமன், சித்த மருத்துவர், ஆரோக்கியா சித்தா மருத்துவமனை, சென்னை.72990 45880info@arogyahealthcare.com