PUBLISHED ON : மார் 15, 2026

நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதே, நோயாளியின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிப்பதும் ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ளது. இந்த முறையில் சிகிச்சை அளிக்கும் போது தான், தனிப்பட்டவரின் நோய் முற்றிலும் குணமாகிறது.
சிலருக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும். சிலருக்கு எல்லா உணவிலும், உப்பு வழக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். சிலருக்கு துவர்ப்பு, ஒரு சிலருக்கு கசப்பு, காரம் என்று ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். அதே போன்று சில சுவை கள் ந மக்கு பிடிக்காது. மசாலா வாசனை அதிகம் இருக்கும் உணவு பக்கம் சென்றாலே குமட்டல் வரும்.
இது சரியா, தவறா என்பதை தாண்டி, தனி நபரின் விருப்பு, வெறுப்பை இது காட்டுகிறது. தனி நபரின் விருப்பம் என்ன என்பதை ஹோமியோபதி மருத்துவத்தில் தெரிந்து, அதன் அடிப்படையில் சிகிச்சை தருகிறோம். இது, மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத தனித்தன்மை என்று சொல்லலாம்.
ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, எப்போதெல்லாம் பி ரச்னை வருகிறதோ, அந்த சமயத்தில் எல்லாம் சிகிச்சை செய்வர். எந்த வெளிக் காரணியின் துாண்டுதலால் ஆஸ்துமா கோளாறு வருகிறது என்பதை அறிந்து, அதை சரி செய்தால், நோயை கட்டுப்படுத்தலாம்.
என்னிடம் இது போன்ற குழந்தையை அழைத்து வந்த தாய், எப்போது எல்லாம் சாக்லேட் சாப்பிடுகிறானோ, அப்போதெல்லாம் மூச்சிரைப்பு வந்து விடும் என்று சொன்னார்.
இனிப்பு சாப்பிடும் சமயங்களில் தான் வருகிறது என்று உறுதியாக தெரிந்தால், இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதற்கு தகுந்த மருந்து கொடுத்தால் பிரச்னை வராது. உதாரணமாக, 'அர்ஜென்டம் நைட்' என்ற மருந்து தந்தால், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் பாதியாக குறையும்; அதனால் ஏற்படும் ஆஸ் துமா முழுமையாக குறையும்.
இதே மருந்து, இன்னொரு ஆஸ்துமா பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பலன் தருமா என்றால் இல்லை. நோயாளியின் விருப்பு, வெறுப்பிற்கு ஏற்ப மருந்து தர வேண்டும்.
டாக்டர் ஜாய்ஸ் திலகம், ஹோமியோபதி மருத்துவர், சென்னை 98415 55955joicethilagam@gmail.com

