sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வளைந்த முதுகு தண்டை நேராக்கும் புரத மருந்து!

/

வளைந்த முதுகு தண்டை நேராக்கும் புரத மருந்து!

வளைந்த முதுகு தண்டை நேராக்கும் புரத மருந்து!

வளைந்த முதுகு தண்டை நேராக்கும் புரத மருந்து!

1


PUBLISHED ON : டிச 28, 2025

Google News

PUBLISHED ON : டிச 28, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஆட்டோ இம்மியூன் டிசார்டர்' எனப்படும் நம் நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடல் செல்களையே அழிக்கும் செயலால் மயோசைடிஸ், ருமட்டாய்டு ஆர்ரைடிஸ் உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. அதில் முதுகு தண்டுவடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் 'ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்' பிரச்னையும் ஒன்று.

இது, முதுகு தண்டுவடத்தில் வலியை ஏற்படுத்துவதோடு, முதுகுத் தண்டை மூங்கில் போல விறைப்பாக்கி விடும்.

ஆன்கிலோசிங் ஸ்பாண்டி லைட்டிஸ் பொதுவாக 20 - -30 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கும். பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.

அறிகுறிகள்

கீழ் முதுகு, பிட்டத்தில் ஏற்படும் வலி, இரவில் அதிகமாகவும், காலையில் எழுந்தபின் அதி தீவிரமாகவும் இருக்கும். கீழ் முதுகு விறைப்பு 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். நடமாட ஆரம்பித்ததும் வலியும், விறைப்புத் தன்மையும் குறையும்.

முதுகு நெகிழ்வுத்தன்மை குறைந்து விடுவதால், இப்பிரச்னை இருப்பவர்கள், முன் பக்கமாக குனிந்து சாக்ஸ், காலணிகளை அணிவதற்குக் கூட சிரமப்படுவர்.

எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ., ரத்தப் பரிசோதனையில் மூங்கில் முதுகுத் தண்டு பிரச்னை உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.

பாதிக்கப்பட்ட தண்டுவட மூட்டுகளுக்கு அதிகபட்ச இயக்கத்தை தந்து வலியைக் குறைப்பது தான் சிகிச்சையின் நோக்கம்.

ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அதாவது வலி நிவாரணிகள் தரப்படும்.

ஸ்டிராய்டு அல்லாத மருந்துகள் என்றாலும், இவற்றை நீண்ட காலத்திற்குப் பயன் படுத்துவது செரிமான மண்டலம், சிறுநீரக கோளாறு களை ஏற்படுத்தலாம்.

பயோலாஜிக்ஸ்

ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ் சிகிச்சையில், மரபணு ரீதியாக வடிவமைக்கப் பட்ட பயோலாஜிக்ஸ் என்ற புரதங்கள் தற்போது மிகச் சிறந்த நிவாரணியாக உள்ளது.

இவை ஆட்டோ இம்யூன் கோளாறால் ஏற் படும் பாதிப்பு களை தடுக்கிறது.

சிகிச்சையுடன் சேர்த்து, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்களுடன் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமான ஸ்ட்ரெச்சிங், தசை வலுப்படுத்தும் பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள் வலி மற்றும் மூட்டுகள், மு துகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் நீச்சல், நீர் சிகிச்சை பயனுள்ளவை. நிற்கும்போது, வேலை செய்யும்போது, துாங்கும்போது உடல் சரியான 'பொசிஷனில்' இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

தலையணைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மல்லாக்க, குப்புறப் படுத்து உறங்க வேண்டும். கொழகொழப்பாக இல்லாமல், உறுதியான மெத்தையில் படுப்பது, முதுகெலும்பு வளைவதைத் தடுத்து தேவையான ஆதரவைத் தரும்.

இதற்கு என்று பிரத்யேக உணவு முறை எதுவும் இல்லை, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க, சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.

டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், முடக்கவியல் சிறப்பு மருத்துவ நிபுணர், அப்பல்லோ மருத்துவ மையம், அண்ணா நகர், சென்னை 18605007788 ramkisandy@gmail.com






      Dinamalar
      Follow us