sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் ஜன்னல்!

/

ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் ஜன்னல்!

ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் ஜன்னல்!

ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் ஜன்னல்!


PUBLISHED ON : நவ 23, 2025

Google News

PUBLISHED ON : நவ 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



மகிழ்ச்சி, சோகம், துக்கம், பதற்றம், பயம், கோபத்தை, ஒருவரின் முகத்தில் கண்களை பார்த்தாலே தெரியும். இது பொதுவான ஒன்று. ஆனால், மருத்துவ ரீதியில் கண்களை பார்த்தே, நம் உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை தெரிந்து கொள்ள முடியும்.

டயாபடிக் ரெடினோபதி

கட்டுப்பாடற்ற, நீண்ட நாட்களாக இருக்கும் சர்க்கரை நோயால், உடலில் உள்ள பல உறுப்புகள் பாதிக்கப்படும். அதில் ஒன்று, கண்ணின் உட்புறத்தில் இருக்கும், 'ரெடினா' எனப்படும் விழித்திரை திசுக்களில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெடினோபதி.

சமீபத்தில் ஓமன் நாட்டில் இருந்து ஒருவர் சிறுநீரகக் கோளாறுக்கு சிகிச்சை எடுக்க வந்தார். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன், கண்களை பரிசோதிக்க என்னிடம் வந்தார். 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளியான அவர், கண் பரிசோதனை செய்வது இதுவே முதல் முறை. டயாபடிக் ரெடினோபதி இருப்பது உறுதியானது. சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வநத பின்னரே அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது.

நீரிழிவு நோய் இருப்பவர்கள், ஆண்டிற்கு ஒரு முறை கண்களை பரிசோதிப்பது கட்டாயம்.

கார்ப்பரேட் மருத்துவமனை களில் கூட, நீரிழிவு நோயாளி களின் கண்களை பரிசோ திப்பது இல்லை. இதற்கு காரணம், நீரிழிவு நோய் வந்ததும் கண்கள் பாதிப்பதில்லை.

மிக மெதுவாகவே கண் நரம்புகளை பாதிக்கும். இன்னும் சிலருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது. கண்களை பரிசோதிக்க செல்லும் போது, ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறகுறிகள கண்களில் தெரியும்.

சர்க்கரை நோய் உள்ளது என்று தெரிய வந்ததோ, அன்றிலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை கண்களை பரிசோதிப்பது அவசியம். இதுவே, 'டைப் - 1' கோளாறாக இருந்தால், கண்களில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக தெரியலாம்.

உயர் ரத்த அழுத்தம்

கரு உருவாகி வளரும் போது, மூளையின் தொடர்ச்சியாக உ ருவானது தான் கண்கள். ரெடினா பரிசோதனையின் போது, கண்களில் உள்ள ரத்தக் குழாய்கள், நரம்புகளை நேரடியாக பார்க்க முடியும்.

உயர் ரத்த அழுத்தம், நரம்பு கோளாறுகள் இருந்தால், அதன் அறிகுறிகள் கண்களில் வெளிப்படும். கண்களை பரிசோதிக்கும் போது, அதன் உள்செயல்பாடுகளை ஸ்கேன் செய்து, வரைபடங்களை பத்திரமாக வைத்துக் கொண்டால், எந்த சமயத்தில் பிரச்னை ஆரம்பித்தது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள உதவும்.

தைராய்டு சுரப்பியின் அதிகப் படியான செயல்பாட்டால் ஏற் படுவது ஹைப்பர் தைராய்டிசம்.

கண்கள் இயல்பை விட பெரியதாக, கோபத்தை வெளிக் காட்டும் விதமாக இருப்பது, உற்று நோக்கும் விதமாக, முழுமையாக கண்கள் மூடாமல், கண் இமை, கண் நரம்புகளில் அழுத்தத்தை அதிகரிப்பது இதன் அறிகுறி கள்.

நோய் தொற்று

சில நாட்களுக்கு முன், இரண்டு வார தொடர் காய்ச்சல் காரணமாக, ஐ.சி.யு.,வில் ஒரு நோயாளி அட்மிட் ஆனார் என்ன காரணத்தால் அவருக்கு காய்ச்சல் வந்தது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதுகுறித்து என்னிடம் சொன்னார்கள். உடனே நான் நோயாளியை பார்த்து, 'இன்டைரக்ட் ஆப்தல்மாஸ்கோப்' என்ற கருவி வாயிலாக ரெடினாவை பரிசோதித்தேன்.

வெள்ளை நிறத்தில் ஒரு சிறிய புள்ளி, நோயாளியின் கண்களில் தெரிந்தது; பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தேன். இதற்கான மருந்துகள் கொடுத்த பின் குணமானார்.

இதய வால்வில் தொற்று ஏற்படும் போது, அந்த தொற்று ரத்தத்தில் கலந்து, அதன் துகள்கள் உடல் முழுதும் குறிப்பாக மூளையையும் பாதிக்கலாம். கண்களை பரிசோதித்தால், இதய வால்வில் தொற்று உள்ளதா என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.

கடந்த வாரம், இது போன்ற இரு நோயாளிகளை இதய மருத்துவர் என்னிடம் அனுப்பி உறுதி செய்தார்.

@block_B@ டாக்டர் இ.ரவீந்திர மோகன், இயக்குநர், கிளினிகள்ஸ் கண் மையம், கிளினிகள்ஸ் மருத்துவமனை, சென்னை  79967 89196  info.ch n@gleneagleshospitals.co.in@@block_B@@






      Dinamalar
      Follow us