sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

குழந்தைகளை அடிமையாக்கும் விளம்பரங்கள்!

/

குழந்தைகளை அடிமையாக்கும் விளம்பரங்கள்!

குழந்தைகளை அடிமையாக்கும் விளம்பரங்கள்!

குழந்தைகளை அடிமையாக்கும் விளம்பரங்கள்!


PUBLISHED ON : நவ 23, 2025

Google News

PUBLISHED ON : நவ 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



'அ ல்ட்ரா புராசஸ்டு புட்' என்ற -யு.பி.எப்.,' எனப்படும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், உலகளாவிய உணவு கொள்கை சீர்திருத்தம் தொடர்பாக, சர்வதேச மருத்துவ இதழான, 'தி லான்செட்'டில் வெளியான எங்களின் ஆராய்ச்சி கட்டுரையின் சிறிய பகுதியை, 'தினமலர்' நாளிதழுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அதிக -பதப்படுத்தப்பட்ட உணவுகள் தற்போது, புதிதாக சமைத்த, குறைந்த அளவே பதப்படுத்தப் பட்ட உணவுகளின் இடத்தை பிடித்து விட்டன. விளைவு, உணவின் தரத்தை இது மோசமாக்கி, நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தை உருவாக்குகிறது.

ஊட்டச்சத்தை கருத்தில் கொள்ளாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு, யு.பி.எப்., உணவு களை கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்நிறுவனங்களின் அரசியல் தந்திரங்கள் தான், நுகர்வை குறைப்ப தில் சிக்கலாக இருக்கின்றன.

பாரம்பரியமான, வீட்டில் சமைத்த உணவு களுக்கு பதிலாக, யு.பி.எப்., உணவுப் பொருட்கள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

யு.பி.எப்., உணவுகள் பெரும்பாலும் கொழுப்பு, சர்க்கரை, உப்பு, அதிக நாட்கள் கெடாமல் இருக்க வேதிப்பொருட்கள், நிறமூட்டிகள், சுவையூட்டும் பொருட்கள் போன்ற தேவையற்ற, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நிறைந்தவை.

குழந்தைகள், இளம் வயதினரை இலக்காக கொண்டு கிராம, நகர்ப் புறம் என்று இரண்டிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

தீவிரமான சந்தைப் படுத்துதல், பிரபலங்கள் பங்கேற்று அப்பொருட் களுக்கு ஆதரவாக பேசும் விளம்பர உத்திகளால், இளம் வயதினர், குழந்தைகள், இப்பொருட்கள் மீது அடிமையாகின்றனர்.

சில்லரை விற்பனைக் கடை அலமா ரிகளில் இப்போது நுாடுல்ஸ், பிஸ்கட்கள், சர்க்கரை- இனிப்பூட்டப்பட்ட பானங்கள், சிப்ஸ், காலை உணவு தானியங்கள் போன்ற முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட உணவு, குளிர்பான பொருட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு உணவுகளின் விளம்பரங்களை கட்டுப்படுத்த நம் நாட்டில் பல சட்டங்கள் இருந் தாலும், அடிப்படையில் அவை பலவீனமானவை. மேலும் உணவு நிறுவனங்கள், சட்டத்திலுள்ள ஓட்டைகளை தங்கள் சுயநலத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி, யு.பி.எப்., உண வுப் பொருட்களை நுகருமாறு தூண்டுகின்றன.

நம் நாட்டில் யு.பி.எப்., உணவுகளின் சில்லரை விற்பனை, கடந்த 20 ஆண்டு களில் 40 மடங்கு அதிகரித்து உள்ளது.

இதே காலகட்டத்தில், நான்கு பேரில் ஒருவர் உடற்பருமனாலும், 10 பேரில் ஒருவர் நீரிழிவு நோயாலும், ஏழு பேரில் ஒருவர் நீரிழிவுக்கு முந் தைய நிலையாலும், மூன்று பேரில் ஒருவர் அடிவயிற்று பருமனாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குழந்தை பருவ உடற் பருமன் அச்சுறுத்தும் விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்த பாதிப்புகளுக்கும், யு.பி. எப்., க்கும் நேரடி தொடர்பு உள்ளது.

'சரியான உணவை சாப்பிடுங்கள்' என்பதைப் போன்ற பிரசாரங்கள், யு.பி. எப்., களின் தயாரிப்பு, நுகர்வை குறைத்தல், அனைவருக்கும் மலிவு விலையில் ஊட் டச்சத்து மிக்க உணவுகள் தடையின்றி எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதும், ஆரோக்கிய மற்ற உணவு பொட்ட லத்தின் முன் பக்கத்தில், புகையிலை பொருட்களில் இருப்பதை போன்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவதும் அ வசியம்.

@block_B@ டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன், சென்னை.94444 322677 jai_sriphysio@yahoo.co.in@@block_B@@

@block_B@ டாக்டர் அருண் குப்தா, டாக்டர் வந்தனா பிரசாத், 98996 76306 arun.ibfan@gmail.com@@block_B@@

@block_B@ டாக்டர் நுாபுர் பிட்லா, புதுடில்லி 99581 63610 nupur@bpni.org@@block_B@@






      Dinamalar
      Follow us