சர்க்கரை நோயாளிகளுக்கு பாதாம் பால் காபி; சோயா பால் டீ!
சர்க்கரை நோயாளிகளுக்கு பாதாம் பால் காபி; சோயா பால் டீ!
PUBLISHED ON : ஜன 18, 2026

நண்பர் ஒரு வர், 'டாக்டர், சர்க்கரை நோய் வந்த பின் பால் சாப்பிடலாமா, வேண் டாமா என்பது பற்றி மனதில் ஒரு குழப்பம் வந்து விட்டது; என்ன செய்யலாம்?' என்று கேட்டார். பாலுக்கும், சர்க்கரைக்கும் என்ன தொடர்பு என்று யோசித்து, நான் செய்த ஆராய்ச்சியில் கிடைத்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் பயன்படுத்தும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலோ, நேரடியாக பசு அல்லது எருமை மாட்டில் இருந்து கிடைக்கும் பாலோ எதுவாக இருந்தாலும், அவற்றில் சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் இருக்கும்.
பசும் பாலில், 'லேக்டோஸ்' எனப்படும் சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பு குறைவாகவும், எருமை பாலில் இவை சற்று அதிகமாகவும் இருக்கும்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு, 'லேக்டோஸ்' உடலுக்குள் சென்றதும், அது குளூக்கோசாக மாறி, ரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது. இதனால், சர்க்கரையின் அளவு 20 - -30 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் எருமை பாலை குடித்தால், இதய நோயாளிகளுக்கு பிரச்னை ஏற்படும்.
பால் குடித்தால் பிரச்னை ஏற்படுகிறது என்றால், இதற்கு மாற்று என்ன என கேட்கலாம்.
நம் நாட்டில் மாட்டுப் பாலுக்கு மாற்றாக ஆட்டுப் பால் தவிர வேறு இரண்டு பால்கள் உள்ளன. அவை பாதாம் பால், சோயா பால். இவற்றில் எந்தவித சர்க்கரையும் இல்லை; புரதம், தாது உப்புகள் உள்ளன; சுவையிலும் பெரிய வித்தியாசம் தெரியாது.
பாதாம் பால் காபி, வழக்கமான காபி சுவையிலும்; சோயா பால் டீ, வழக்கமான டீ சுவையிலும் இருக்கும்.
வழக்கமான பால் குடிக்க முடியாதோர், இதற்கு மாற்று இருக்கிறது என்பதை மனதில் வைத்து க் கொள்ள வேண்டும்.
டாக்டர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், இதய நோய் சிறப்பு மருத்துவர்,பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கோவை. 99527 15222drbhucbe@yahoo.co.in

