PUBLISHED ON : அக் 26, 2025

மொபைல் போனை 'ஹெட் செட், இயர் போன்' மாட்டிக் கொண்டு, ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் கேட்பதால், எந்த வயதினராக இருந்தாலும் காது கேட்கும் திறனை பாதிக்கும்.
நகர்ப்புறத்தில் 10ல் மூன்று பேருக்கு இப்பிரச்னை உள்ளது.
இது தவிர, இசையை தொழிலாக கொண் டவர்கள். ஆன்-லைன் வகுப்புகளில், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் இருப்பவர்கள், 'பெர்சனல் லிஸ்சினிங் டிவைஸ்'- பிஎல்வி கருவியை பல மணி நேரம் உபயோகிக்க வேண்டிய நிலையில், நாளடைவில் எந்த அளவு சத்த ம் வைக்கிறோம் என்பதையே மறந்து, அதிகபட்சம் சத்தம் வைத்து கேட்க ஆரம்பித்து விடுவர்.
எவ்வளவு சத்தம் வைக்கலாம்?
மொபைல் போனில் சத்தத்தை காட்டும் குறியீட்டில் பாதிக்கும் குறைவாக வைத்தே கேட்க வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் தாண்டினால், 5 -- 10 நிமிடங் கள் காதுகளுக்கு ஓய்வு தர வேண்டும். அப்படி தராவிட்டால், கேட்கும் திறனை இழப் பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
எப்படி கணிப்பது?
முணுமுணு ப்பாக பேசுவதை 'நோ பிரீக் வென்ஸ்சி' என்றும், வேறு வெளி சத்தங்கள் இல்லாத இடத்தில் இயல்பாக பேசுவதை 'மிட் பிரீக்வென்ஸ்சி' என்றும், பொது இடங்களில் பல்வேறு சத்தங்களுக்கு நடுவே சத்தமாக பேசுவது 'ஹை பிரீக்வென்ஸ் சி' என்றும் சொல்கிறோம்.
பிரச்னை ஆரம்பம்
அரசின் உயர் பதவியி ல் இருக்கும் பலர் என் நோயாளிகள். 'ஜூம், கூகுள் மீட், வீடியோ கான்பரன்ஸ்' நடக்கும் சமயங்களில், அவர்களின் உயரதிகாரிகள் பேசுவது கேட்கிறது. ஆனால், என்ன சொல்கின்றனர் என்பது புரியவில்லை. அதனால், என்னால் சரியான பதிலை சொல்ல முடியவில்லை என்று சொல்வர்.
இது ஒரு எச்சரிக்கை. சத்தமாக பேசும் போது ஆரம்பிக்கும், கேட்கும் திறன் இழப்பு, நாளடைவில் இயல்பாக பேசுவதிலேயே வந்து விடும். ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை பெற்றால் , காது கேளாமையை தடுக்கலாம்.
தொடர்ந்து அதிக சத்தத் துடன் கேட்டால், இத்தனை நாட்களில் காது கேட்காது என்று சொல்ல முடியாது. தொழிற்சாலைகளில் 80 டெசிபலுக்கு மேல் சத்தத்தில் நாள் முழுதும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருந்தால், வெகு விரைவிலேயே கேட்கும் திறன் பாதிக்கப்படும். அதிக சத்தம் என்பது காதுகளின் மேல் நடத்தப்படும் தாக்குதல்.
மொபைல் போனில் அழைப்புகளை ஏற்கும் போது அதிக சத்தத்தில் வைத்தால் தான் கேட்கிறது. தனி அறையில் 'டிவி' பார்க்கும் போது, 'ஏன் இவ்வளவு சத்தமாக 'டிவி' பார்க்குறே?' என்று மற்றவர்கள் சொல்லும் போது தான், 'டிவி' சத்தம் அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. சில பேர் போனில் ஸ்பீக்கர் இருக்கும் கீழ் பகுதியை காதுக்குள் வைத்து பேசுவர். இவைஎல்லாம் பிரச்னை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதற்கான அறிகுறிகள்.
நரம்புகள் மீது தொடர்ச்சியாக செய்யப்படும் தாக்குதல், ஆரம்பத்தில் சரி செய்யக் கூடியதாக இருக்கும்; அதன் பின், சரி செய்யவே முடியாத நிலைக்கு செல்லும். 'ஹியரிங் எய்டு' தான் பொருத்த வேண்டும்.
60/60 விதி
முடிந்தவரை இயர் போனில் கேட்பதை தவிர்க்கலாம். போனில் பேசும் போது, அமைதியான இடத்திற்கு சென்று விட்டால், சத்தத்தை அதிகரிக்க மாட்டோம்.
மற்ற அளவுகளை போல இல்லாமல், சத்தத்தை 10 டெசிபல் அதிகரித்தால் சத்தம் வெறும் 10 பாயின்ட் அதிகரிப்பதில்லை; மாறாக, 10 மடங்கு அதிகரிக்கிறது. 60 சதவீத சத்தம் / 60 நிமிடங்கள் என்ற விதியை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.
டாக்டர் கார்த்திக் மாதேஷ், இயக்குநர், காது, மூக்கு, தொண்டை பிரிவு, சிம்ஸ் மருத்துவமனை, சென்னை. 94009 33973karthikmadesh@kotmail.com

