தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆயுர்வேதமும் சிறுநீரக பாதுகாப்பும்!

ஆயுர்வேதமும் சிறுநீரக பாதுகாப்பும்!

ஆயுர்வேதமும் சிறுநீரக பாதுகாப்பும்!


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்களிடம் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நண்பரின் உறவினருக்கு நடந்த சம்பவம், எங்களின் கவனத்திற்கு வந்தது.

அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்ட பின், அவரது ரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரித்துவிட்டதால், மீண்டும் அலோபதி சிகிச்சைக்கு சென்று விட்டதாக சொன்னார்.

ஆயுர்வேத மருந்துகளால் கிரியேட்டினின் அளவு அதிகரிக்கும் என்பது வியப்பை தருகிறது.

ஆயுர்வேதமும், சிறுநீரக பாதுகாப்பும்!

சிறுநீரகங்கள், கல்லீரலை ஆயுர்வேத மருந்துகள் பாதிக்காது என்பதற்கு, அறிவியல் ரீதியான சான்றுகள் பல உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு ஆய்வறிக்கையை, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் மகாதேவன் வெளியிட்டுள்ளார். அதில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னும், சிகிச்சை அளித்த பின்னும் எடுத்த ரத்த பரிசோதனை முடிவுகளில், ஆயுர்வேத மருந்துகள் சிறுநீரகங்களை பாதிப்பதில்லை என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். இந்த தகவல்கள் இணைய தளங்களிலும் உள்ளன.

அப்படியென்றால், அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு கிரியேட்டினின் அளவு ஏன் அதிகரித்தது? அந்த நோயாளிக்கு, சிறுநீரகங்களை பாதிக்கும், 'ஆட்டோ இம்யூன' பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக, 'நெப்ரைட்டிஸ்' எனப்படும் சிறுநீரக வீக்கம் ஏற்பட்டு, கிரியேட்டினின் அதிகரித்துள்ளது.

இதற்காக, அலோபதி மருத்துவர்கள் 'ஸ்டிராய்டு' மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர்.

ஆனாலும், அவருடைய கிரியேட்டினின் அளவு குறையவில்லை. இதனால், ஸ்டிராய்டு மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ஆயுர்வேத மருத்துவரை அணுகியுள்ளார். சிறுநீரக வீக்கத்தை ஓரளவாவது தடுத்து வைத்திருந்த ஸ்டிராய்டு மருந்துகளை திடீரென நிறுத்தியவுடன், நோய் தீவிரம் அடைந்து, கிரியேட்டினின் அளவு அதிகரித்து உள்ளது.

ஆட்டோ இம்யூன் பாதிப்பை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஸ்டிராய்டு மருந்துகளை, தகுந்த மருத்துவ ஆலோசனை இன்றி திடீரென நிறுத்தியதே கிரியேட்டினின் அளவு அதிகரிக்க காரணம்.

டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர்,ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை 96101 77899sreehareeyam.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us