தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முதியோருக்கு படுக்கை புண் நன்கு பராமரித்தால் சவுக்கியம்

முதியோருக்கு படுக்கை புண் நன்கு பராமரித்தால் சவுக்கியம்

முதியோருக்கு படுக்கை புண் நன்கு பராமரித்தால் சவுக்கியம்


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நீண்ட நாட்கள் படுக்கையில் இருக்கும் முதியோருக்கு, ரத்த ஓட்டம் குறைந்து, தோல் திசுக்கள் சேதமடைந்து படுக்கைப்புண் உருவாகும் அபாயம் இருப்பதால், பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார், பொது நல மருத்துவர் டாக்டர் கவுதம்.

அவர் கூறியதாவது:

இடுப்பு, குதிகால், கணுக்கால், முழங்கை, தோள்பட்டை மற்றும் தலையின் பின்பகுதி போன்ற எலும்புகள் வெளிப்படையாக தெரியும் இடங்களில் படுக்கைப்புண்ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இப்பகுதிகளில் தோல் நிறம் மாறியிருக்கிறதா, புண்கள் இருக்கிறதா என தினசரி கண்காணிப்பது அவசியம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வேறு பக்கம் மாற்றி படுக்க வைக்க வேண்டும்.

கால் முட்டி, கணுக்கால்களின் கீழே மென்மையான தலையணை பயன்படுத்துவதால், உராய்வை குறைக்கலாம். படுக்கையில் இருந்து நகர்த்தும் போது, தோலை நேரடியாக தொடாமல், துணி அல்லது பெட்ஷீட் உதவியுடன் மெதுவாக மாற்ற வேண்டும். வயதாகும் போது, சருமம் சுருங்கி மிக மென்மையாக மாறிவிடும். கடுமையாக அழுத்தி தேய்க்காமல், வெதுவெதுப்பான நீர், மிதமான சோப்பு பயன்படுத்தி தினசரி சுத்தம் செய்ய வேண்டும்.

சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். சிறுநீர் அல்லது மலம் கழித்த உடனே, டயப்பரை மாற்றி, அந்தப் பகுதியை உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் படுக்கைப்புண் உருவாக்கலாம்.

படுக்கை புண் உள்ள பகுதி அடர் சிவப்பு அல்லது நீல நிறமாக மாறுதல், துர்நாற்றத்துடன் சீழ் வெளியேறுதல், வீக்கம் அல்லது அதிக வெப்பம் ஏற்படுவது, திடீர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

'உணவில் இருக்கு மருந்து'

''புரதச்சத்து நிறைந்த உணவு, உடல் திசுக்களை விரைவில் சீராக்கும். முட்டை வெள்ளைக்கரு, பால், பருப்பு வகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். விட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்த உணவு, படுக்கைப்புண் ஆற உதவும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவு அவசியம். மருத்துவ சிகிச்சையுடன், பராமரிப்பிலும் அதிக கவனம் செலுத்தினாலே, படுக்கைப்புண் விரைவில் குணமாகும்,'' என்றார் டாக்டர் கவுதம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us