PUBLISHED ON : செப் 28, 2025

காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதை நிறுத்தினாலே தேவையில்லாமல் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. அதற்கு பதிலாக, பழங்கள், காய்கறி சூப் சாப்பிடலாம். காலையில் உடற்பயிற்சி செய்தால் நாள் முழுதும் சுறு சுறுப்பாக இருக்கலாம். உடல்ரீதியான ஸ்ட்ரெஸ் என்பது உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் அழுத்தம். இது உடலை வலிமையாக்கும். ஆனால் காபி என்பது கெமிக்கல் ஸ்ட்ரெஸ்.
அது காலையில் ஆரம்பித்து நாள் முழுதும் நம்மை ஸ்ட்ரெஸ்சாகவே வைத்திருக்கும். இப்படி நாள் முழுதும் ஒரு வித அழுத்தத்துடன் இருப்பதும் உடல் எடை அதிகரிக்க ஒரு காரணம். உடல் ரீதியாக ஆரோக்கியமாக, வலிமையாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி கட்டாயம். உடற்பயிற்சி என்பது, தசைகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகளாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட வயதிற்கு மேல் தசைகளை வலிமைப்படுத்துவது சிரமம். எனவே இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து ஒரு குழு அமைத்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி செய்யலாம். இது ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்த உதவும்.
மாரத்தான் குழுக்களுடன் இணைந்து முறையான பயிற்சிக்கு பின் ஓடலாம். சுத்திகரிக்கப்பட்ட, உணவுகள், சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.யோகா உட்பட அனைத்து விதமான உடற்பயிற்சியும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
டாக்டர் சுதீர் ஐயப்பன், ஆயுர்வேத மருத்துவர், ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை 86101 77899 sreehareeyam.co.in