தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பிரசவத்துக்கு முன்பும் பின்பும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்: தீர்வு தருகிறது கோயம்புத்துார் மோம்ஸ்

பிரசவத்துக்கு முன்பும் பின்பும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்: தீர்வு தருகிறது கோயம்புத்துார் மோம்ஸ்

பிரசவத்துக்கு முன்பும் பின்பும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்: தீர்வு தருகிறது கோயம்புத்துார் மோம்ஸ்


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய அம்மாக்களான சுகன்யா மற்றும் பிரியதர்ஷினி இணைந்து இன்ஸ்டாகிராமில் ஒரு பேஜ் துவங்கியுள்ளனர். இதன் பெயர், 'கோயம்புத்துார் மோம்ஸ்'.

'மகிழ்ச்சியான அம்மாக்கள்...மகிழ்ச்சியான குடும்பங்கள்' இதுவே நோக்கம்.

கர்ப்ப காலம், பிரசவத் துக்கு பிந்தைய மனஅழுத்தம், தனிமை, வேலையில் இருந்து பிரேக்...இப்படி ஒரு பெண் கர்ப்பிணியானால், எதிர்கொள்ளும் சில பிரச்னைகளை அனுபவித்த இவர்கள், இது குறித்து சக கர்ப்பிணிகள், இளம் தாய்மார்களிடம் விவாதித்து தீர்வு காண்கின்றனர்.

'கர்ப்ப கால மற்றும் கர்ப்பத்துக்கு பிந்தைய மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மீண்டு வருவது குறித்த ஆலோசனைகளையும் பகிர்வதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம்' என்கின்றனர் கர்ப்பிணி தாய்மார்கள் சிலர்.

கோவையில் ஏதா வது ஒரு பகுதியில் உள்ள ஒரு அமைதியான பொது சந்திப்பு மையங்களில் இவர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். சிறு விளையாட்டுகள், பேரன்டிங் டிப்ஸ் பங்கிட்டு மகிழ்ச்சியுடன் பிரிகின்றனர்.

'புதியவர்களை சந்தித்து, பர்சனல் விஷயங்களை ேஷர் செய்கிறோம்; ஆனால் எந்த பயமுமின்றி மகிழ்ச்சியோடு பிரிந்து செல்கிறோம்' என்பதுதான் இது போன்ற சந்திப்புகள் குறித்து இளம் அம்மாக்கள் வெளிப்படுத்தும் வினோதமான ஸ்டேட்மென்ட்!

நன்கு படித்து, நல்ல வேலையில் கைநிறைய சம்பாதித்து வந்தவர்கள் திடீரென முடங்க நேரிடும்போது ஏற்படும் பொருளாதார சிக்கல், கவலைகளை போக்க, வீட்டில் இருந்தபடி செய்யும் பிசினஸ் ஐடியாக்கள் தருவதோடு, பயிற்சியும் தருகின்றனர்.

“பெண்கள் அறிந்து கொள்ள இன்னும் பல நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும், தேவைப்படுவோரை கண்டறிந்து உதவவும் திட்டமிட்டுள்ளோம். எந்த பெண்ணும் வாழ்வில் முடங்கி விடாமல், நம்பிக்கையுடன் எழுந்து நிற்க உதவுவதே லட்சியம்'' என்கின்றனர் சுகன்யாவும் பிரியதர்ஷினியும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us