தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறதே?

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறதே?

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறதே?


PUBLISHED ON : ஆக 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்நேரமும் இயர்பட்ஸ், ஹெட்போனுடன் இருப்போருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படலாம் என்ற கேள்வியுடன், அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சரவணனை அணுகினோம்.

குழந்தைகளுக்கு காது கேளாமை குறையை எப்படி ஆரம்பத்திலே கண்டறிவது?

பிறவியிலே காது கேளாமை இருந்தால், எந்த சத்தத்திற்கும் குழந்தைகள் ரியாக்ட் செய்ய மாட்டார்கள். ஒரு வயதுக்கு மேல் காது கேட்காமல் இருந்தால், எந்த வார்த்தையையும் குழந்தை உச்சரிக்காது. இதுதான் அறிகுறிகள். முன்கூட்டியே சிகிச்சைக்கு வந்தால், பேச்சுப்பயிற்சியும் விரைவில் துவங்க முடியும்.

அடிக்கடி சளி, மூக்கடைப்பு, தொண்டை பிரச்னையால் குழந்தைகள் பாதிக்கப்பட காரணம் என்ன?

அலர்ஜி, தொற்று ஆகியவற்றால், குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, சளி, தொண்டை, காது பிரச்னை ஏற்படுகிறது. மூக்கில் அடினாய்டு, டான்சில் சதை வளர்ச்சி இருந்தாலும், அடிக்கடி மூக்கடைப்பு, தொண்டை பிரச்னை ஏற்படும். சளியில் ரத்தம் வந்தால், சதை வளர்ச்சி மட்டுமல்லாமல், வேறு ஏதேனும் பொருட்கள் மூக்கிற்குள் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும்.

காது அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?

சாதாரண அழுக்கு, பூஞ்சை தொற்றில் ஆரம்பித்து, மற்ற கிருமி தொற்றுகளாலும் காது அடைப்பு வரும். எண்டோஸ்கோப்பி மூலம் பரிசோதிக்க வேண்டும். பட்ஸ், சேப்டி பின் உள்ளிட்ட ஏதாவது பொருளை காதுக்குள் விடும் பட்சத்தில், அது உள்காது வரை சென்று, தொற்றை மேலும் அதிகரிக்கலாம். டாக்டரிடம் பரிசோதிப்பதே தீர்வாகும்.

காது கேளாமைக்கான காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை பற்றி?

உள்காது செயலிழப்பு, உள்காது நரம்பு செயலிழப்பால் வரும் காது கேளாமை பிரச்னைக்கு காக்ளியர் இம்பிளான்ட் தான் நிரந்தர தீர்வு. எந்த வயதினரும் இந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். வயதாவதால் வரும் காது கேளாமை பிரச்னைக்கு ஹியரிங் எய்டு பொருத்தியும் தீர்வு கிடைக்காதவர்கள், காக்ளியர் இம்பிளான்ட் செய்து கொள்வதே சிறந்தது.

இயர்பட்ஸ், ஹெட்போன் அதிகமாக பயன்படுத்துவது கொடுதலா?

செல்போனிலே குறிப்பிட்ட அளவுக்கு மேல் சத்தம் அதிகரிக்க கூடாதென எச்சரிக்கை மெசேஜ் தருகிறது. தொடர்ந்து அதிக ஒலியுடன் கேட்கிறார்கள். அதிக ஒலி அலைகள் தொடர்ந்து உள்காதில் செல்வதால், நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம். எப்போதும் காதுகளை அடைத்தே வைத்திருப்பதால், பூஞ்சை தொற்று, அழுக்குகள் சேரவும் வாய்ப்புள்ளது.

vsaravanan.ent@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us