தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பரிந்துரையின்றி ஆன்டிபயாட்டிக் வேண்டாம்

பரிந்துரையின்றி ஆன்டிபயாட்டிக் வேண்டாம்

பரிந்துரையின்றி ஆன்டிபயாட்டிக் வேண்டாம்


PUBLISHED ON : ஆக 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சளி, காய்ச்சல், தொண்டை வலி என, சாதாரண வைரஸ் தொற்றுகளுக்கு, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது என்கிறார் ராயல்கேர் மருத்துவமனையின் பொது மருத்துவம் மற்றும் தொற்று நோயியல் துறை மருத்துவர் டாக்டர் நவீன்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை யாருக்கும் நோய் தொற்று ஏற்படலாம். சமுதாயம் சார்ந்த தொற்று நோயாக, சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்று போக்கு, தோல் அரிப்பு போன்றவை ஏற்படும். நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், தோல் என பாதிப்புகளை ஏற்படுத்தும். வைரஸ் தொற்றுக்கு, ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் பயனில்லை. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்து கடைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை, 10 சதவீத மக்களுக்கு மட்டுமே உபயோகமாக உள்ளது.

சாதரண வைரஸ் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்தாலே சரியாகி விடும். சமுதாய நோய் தொற்றுக்களை தடுக்க, எப்பொழுதும் கைகளை சுத்தகமாக வைத்துக் கொள்ள வேண்டும். சோப்பு அல்லது நோய் கிருமிகளை தடுக்கும் சானிட்டைசர்களை பயன்படுத்த வேண்டும். கோவிட் தொற்று சமயத்தில் ஏற்பட்ட நடைமுறைகளை பாதியாவது செய்தால், தொற்று நோயை தவிர்க்கலாம்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உருவாகும். தடுப்பூசிகளை போட்டு கொள்வதால், பல நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை உடலில் ஏற்படுத்தலாம். குழந்தை பருவம் முதலே தடுப்பூசி போடுவது அவசியம். தீவிர தொற்றுக்கள் ஏற்படுவதை தடுக்க இது உதவும். 50 வயதுக்கும் மேல் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், தடுப்பூசி போடுவது சிறந்தது. குறிப்பாக, வைரஸ் காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்றை தவிர்க்க முதியவர்களுக்கு அவசியம். நோய்கள் இருப்பின் அதன் தன்மைக்கு ஏற்ப தடுப்பூசி தேவை. வெளிநாடு பயணம் செல்வோர், அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்த நாட்டில் உள்ள நோய்களுக்கு எதிர்ப்பாக தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

தொற்று நோயை கண்டறியவும், கிருமிகளை சில மணி நேரங்களில் அறியவும், விரைவாக சிகிச்சை பெறவும் அதி நவீன தொழில்நுட்பமும், உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களும் ராயல்கேர் மருத்துவமனையில் உள்ளன. நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் குழு, பணியாளர்களும் சிகிச்சையை அளிக்க உள்ளனர். ராயல்கேர் மருத்துவமனையிலேயே தொற்று நோய் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us