தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஒரு இதய துடிப்பை கூட தவறவிடக் கூடாது!

ஒரு இதய துடிப்பை கூட தவறவிடக் கூடாது!

ஒரு இதய துடிப்பை கூட தவறவிடக் கூடாது!


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிடடத்தட்ட 52 நாடுகளில், உள்ள மாரடைப்பு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், முதல்முறையாக வரும் 90 சதவீத மாரடைப்புகளுக்கான தடுக்கக்கூடிய ஆபத்து காரணிகளை வெளியிட்டு உள்ளனர்.



உயர் ரத்த அழுத்தம்


உயர் ரத்த அழுத்தத்தை ஒரு நோயாகவே நாம் பார்ப்பதில்லை; எந்த அறிகுறிகளும் இருக்காது. காய்ச்சல் வந்த ஒருவர் இரண்டு நாட்களுக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார். ஆனால், 170/100 எம்.எம்.ஹெச்.ஜி., என்ற அளவில் ரத்த அழுத்தம் உள்ள ஒருவர், அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். காரணம், அறிகுறிகளை காட்டாமல் இருக்கும் அமைதியான கொலையாளி.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களில், 50 சதவீதத்தினருக்கு பிரச்னை இருப்பதே தெரிவதில்லை.

சிகிச்சை பெறுபவர்களில், ஐந்தில் ஒருவர் தான் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மேலும், 40 வயதிற்குப் பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து கொள்வது அவசியம்.

கொழுப்பு

உடலின் இயக்கத்திற்கு தேவையான கொழுப்பு, இரண்டு விதங்களில் கிடைக்கிறது; ஒன்று கல்லீரலிலிருந்து 80 சதவீதம் உற்பத்தி செய்யும்; மற்றொன்று மாமிசம், இறைச்சி, பால் போன்ற பொருட்களால் நாம் சாப்பிடும் உணவில் இருந்து 2 0 சதவீதம் கிடைக்கும்.

இதில், எல்.டி.எல்., எனப்படும் கெட்ட கொழுப்பு ரத்த நாளங்களில் படிந்து, அவற்றை குறுகச் செய்யும்; ரத்த ஓட்டம் தடைபடும்; மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும்.

ஹெச்.டி.எல்., எனப்படும் நல்ல கொழுப்பு அதிக அளவில் இருந்தால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை மீண்டும் கல்லீரலுக்கே கொண்டு செல்லும்; அதை கல்லீரல் கரைத்து விடும். விதைகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்களை அதிக அளவில் சாப்பிடும் போது, நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய இவை கல்லீரலைத் துாண்டும். பதப்படுத்தப்பட்ட, சுத்திகரித்த, வறுத்த, பொரித்த உணவுகள், பன்றி, மாட்டிறைச்சி சாப்பிட்டால், கெட்ட கொழுப்பு அதிக அளவில் உடலில் சேரும்.

புகை பிடித்தல்

சமீபத்தில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை, 'தி லான்செட் -பப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில், சிகரெட் பழக்கம் உள்ளவர்களைக் காட்டிலும், அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்களுக்கு, பல்வேறு உடல் கோளாறுகளால், 50 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது .

அடுத்தவர் விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதாலேயே, சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

சர்க்கரை நோய்

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது, சர்க்கரை நோய் உள்ள இந்தியர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதய தமனி நோய் வந்துவிடுகிறது. வாழ்க்கை முறையில் மாற்றங்களோடு சரியான மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

உடற்பயிற்சி

வாரத்தில், குறைந்தது 150 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பான நடை பயிற்சி, ஏரோபிக் பயிற்சி, வாரத்திற்கு இரண்டு முறை தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

மதுப்பழக்கம், போதிய துாக்கமின்மை மற்றும் அதீத மன அழுத்தம் ஆகியவை இதய நோய் ஆபத்தை மேலும் அதிகரிக்கும்.

இதய நோய்களால், ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த இறப்புகளில் 80 சதவீதம், தடுக்கக்கூடிய நோய்களால் ஏற்படுகின்றன. இந்த ஆண்டிற்கான உலக இதய தினத்தின் கருப்பொருள், 'ஒரு துடிப்பைக்கூட தவறவிடாதீர்கள்' என்பது தான்.

டாக்டர் துர்காதேவி, இதயவியல் நிபுணர், சென்னை. 86083 02025

drdurgachennai@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us