sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பல வண்ணங்களில் இட்லி சாப்பிடுங்க...!

/

பல வண்ணங்களில் இட்லி சாப்பிடுங்க...!

பல வண்ணங்களில் இட்லி சாப்பிடுங்க...!

பல வண்ணங்களில் இட்லி சாப்பிடுங்க...!


PUBLISHED ON : அக் 05, 2025

Google News

PUBLISHED ON : அக் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலையில் சாப்பிடும் சாப்பாடு புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்; 45 வயதிற்கு மேல் காலையில் தினமும் இட்லி சாப்பிடுவது தவறு. அதிலும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், காலை உணவு புரதம் நிறைந்ததாக இருப்பது அவசியம்.

ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கச் செய்யும், 'கிளைசீமிக் இன் டெக்ஸ்' குறைந்த உணவு கள் குறித்த ஆராய்ச்சி சென்னையில் நடந்தது. இதில், வெள்ளை அதிக புரதச் சத்துள்ள கொண்டைக் கடலை முதலிடம் பிடித்தது. இது, சர்க்கரையை வேகமாக ரத்தத்தில் கலக்க விடாது.

உடைத்த கோதுமை ரவை உப்புமா இரண்டாம் இடத்தில் உள்ளது.

நம் நாட்டின் முன்னணி உணவியல் வல்லுனர்கள் இணைந்து செய்த ஆராய்ச்சி இது.

வேக வைத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், அடுத்த முக்கால் மணி நேரத்தில் அதிலுள்ள மாவுச்சத்து முழுதும் ரத்தத்தில் கலந்து விடும்.

குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள காய் கறிகள், பழங்கள், உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். இத்துடன் முட்டை, நிலக்கடலை, பாதாம், சுண்டல், காய்கறி சூப், பழங்கள் சாப்பி டலாம்.

காலை உணவில் இட்லியை காணோமே என்று தோன்றலாம். வாரத்திற்கு ஓரிரு நாட்கள் இட்லி சாப்பிடலாம்; அதுவும் வெள்ளையாக இருக்கக் கூடாது; அழுக்காக பாரம்பரிய அரிசி வகைகளில் தயாரித்த கருப்பு, சாம்பல், பிரவுன், சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

கோவை விவசாய பல்கலைக் கழகத்தில் நான் படித்த ஆய்வுக் கட்டுரையில், நான் நினைத்ததை விட அதிக சத்துக்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருப்பதைப் படித்தேன்.

இதில் உள்ள 'லைகோபின்' என்ற ஆன்டி ஆக்சிடென்ட், 'பிரீ ரேடிக்கல் ஸ்கேவென்சர்ஸ்' எனப்படும் செல்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஸ்சிஜன் கூறுகளை அழிக்கக் கூடியது.

மாதுளை, சிவப்பு கொய்யா, தக்காளி போன்ற சிவப்பு நிறத்தில் உள்ள அனைதும் கேன்சரை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

நோய் வரக்கூடாது, நம் மரபணுவில் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளது என்றால், இளம் வயதில் இருந்தே இது போன்ற சிவப்பு நிற காய்கறி, பழங்கள், தானியங்கள் தினமும் உணவில் இடம் பெற வேண்டியது அவசியம்.

டாக்டர் ஜி.சிவராமன், சித்த மருத்துவர், ஆரோக்கியா சித்த மருத்துவமனை, சென்னை. 72990 45880info@arogyahealthcare.com






      Dinamalar
      Follow us