தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/அதீத வெயில், தோல் நோய்களை ஏற்படுத்தும்!

அதீத வெயில், தோல் நோய்களை ஏற்படுத்தும்!

அதீத வெயில், தோல் நோய்களை ஏற்படுத்தும்!


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இல்லாமல் போகும் போது, உடலில் நோய்கள் ஏற்படுகின்றன.

வாதம்

வாதம் அதிகரிக்கும் போது, தோலில் கருப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறம், வறட்சி, வெடிப்பு, வலி, படர் தாமரை எனப்படும் சொரியாசிஸ் உட்பட பல நோய்கள் வரலாம்.



பித்தம்


பித்தம் அதிகமானால், சிவப்பு, மஞ்சள், பச்சை நிறமாக தோல் மாறுதல், எரிச்சல், புண், கொப்புளம், தோல் சிதைவு காணப்படும்.

கபம்

கபம் அதிகரித்தால், தோல் வெள்ளை நிறமாதல், தடிப்பு, அரிப்பு, கிருமி தொற்று, உணர்வு குறைதல் ஏற்படலாம்.

காரணங்கள்

மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் ரத்தம் அசுத்தமாகி, வாதம் மிகுதியாகலாம்.

சிறுதானியங்கள், வாழைக்காய், கொள்ளு, பாகற்காய், குளத்து மீன் போன்ற உணவுகள், சிலருக்கு , கரப்பான் எனப்படும் 'எக்சீமா' நோய் ஏற்படுத்தும்.

தீவிர மன அழுத்தம், நீரிழிவு, தைராய்டு கோளாறுகள், ஆட்டோ இம்யூன் நோய்களால் தோலில் மாற்றம் ஏற்படலாம். மாசடைந்த காற்றில் உள்ள நச்சுகள், துாசு, புகை, அதிகமான வெயில், தோலில் ஊடுருவும் புற ஊதா கதிர்கள், சில வகை பூச்சி கடியாலும் தோல் நோய் ஏற்படும்.

எக்சீமா, படர் தாமரை, முடி உதிர்தல், சொறி, முகப்பரு உட்பட அனைத்து தோல் நோய்க ளுக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது.

தோல் நோய்களை தடுக்க

செல் அழிவுகளை தடுத்து, மெருகு ஏற்படுத்தும் வைட்டமின் 'ஏ, பி' சத்து நிறைந்த அடர் நிற கீரைகள், ஆரஞ்சு வண்ண காய்கறிகள், முட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஈரல் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். இது, தோலில் உள்ள கொலோஜன் திசு உற்பத்திக்கு உதவுகிறது.

வைட்டமின் 'சி' நிறைந்த நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, முருங்கை கீரை, தோலில் உள்ள சுருக்கங்களை போக்கும் வைட்டமின் 'இ' அதிகமுள்ள பாதாம், வால்நட், பசலை கீரை, ஓட்ஸ் உணவில் இடம் பெற வேண்டும்.

சிறு மீன்கள், நண்டு, இறால், தோலுடன் கூடிய சிறுதானியங்கள், கைக்குத்தல் அரிசி போன்ற உணவுகளில் செலினியம் அதிகம் உள்ளது.

இது, தோலில் மிரு துவான தன்மை யையும், நெகிழ்வு தன்மையையும் பாதுகாக்கும். முகப்பரு, தழும்பு, தோல் புற்று நோயை தடுக்கும். தோல் சுருக் கம், காயங்கள், சிராய்ப்பு, சிரங்கை போக்கும், 'ஒமேகா - 3 பேட்டி' அமிலம், மீன் எண்ணெய், ஆளி விதையில் அதிகமுள்ளது.

தோலின் ரத்த செல் களையும் மற்றும் காயமடைந்த செல்களையும் சரி செய்து, புற ஊதா கதிர்களிலிருந்தும் பாதுகாப்பது ஜிங்க் சத்து.

நாள்பட்ட தோல் நோய்களுக்கு, அகத்தியர் குழம்பு, சித்தாதி எண்ணெய், முருக்கன் விதை மாத்திரை, வெள்ளை எண்ணெய், மேகநாத குளிகை ஆகிய மருந்துகளை, சித்த மருத்துவர் ஆலோசனை யுடன் பயன்படுத்தலாம்.

டாக்டர் சா.காமராஜ், மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அலுவலர்,திருச்சி 94898 20113kaamaraaj@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us