தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அதீத சுறுசுறுப்பு கவனச்சிதறல் நோயின் அறிகுறி!

அதீத சுறுசுறுப்பு கவனச்சிதறல் நோயின் அறிகுறி!

அதீத சுறுசுறுப்பு கவனச்சிதறல் நோயின் அறிகுறி!


PUBLISHED ON : செப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிறைய குழந்தைகளுக்கு, கவனச் சிதறல் நோய் உள்ளது. இதை, 'அட்டென்ஷன் டெபி சிட் ஹைப்பர் ஆக்டிவ் டிசார்டர்' என்று சொல்வோம். இப் பிரச்னை இருந்தால், ஒரு பொருளையோ, விஷயத்தையோ தொடர்ந்து கவனிக்கும் தன்மை குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும். இத்துடன் அதீத சுறுசுறுப்பாக குழந்தைகள் இருப்பர். இவை நல்ல விஷயங்கள் தானே என்று தோன்றினாலும், இயல்புக்கு அதிகமாக இருக்கும்போது, பாதிப்பாகத்தான் பார்க்க வேண்டும்.

எப்படி கண்டுபிடிப்பது?

நாம் சொல்லும் விஷயத்தை குழந்தையால் தொடர்ந்து கவனிக்க முடியாது. பெற்றோர், ஆசிரியர் சொல்லும் கட்டளை களுக்கு கீழ்படிய மாட்டார்கள். அன்றாட வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாது. படம் வரைவது போன்ற மூளை சார்ந்த வேலைகள் தந்தால் செய்ய முடியாது. மற்ற குழந்தைகளுடன் இணைந்து படிப்பது, எழுதுவது போன்றவற்றை செய்வது சிரமம்.

இந்த அறிகுறிகள் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு மேல் இருந்தால், குழந்தைக்கு கவனச் சிதறல் நோய் இருக்கலாம்.

என்ன காரணம்

மரபியல் காரணியாக இருக்கலாம். கர்ப்பத்தில் இருக்கும்போது, தாய் சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, மனநிலை, சில வகையான மருந்துகள் இதற்கு காரணமாகலாம்.

பொதுவாக ஒரு விஷயத்தை குழந்தை கற்றுக் கொள்ளும்போது, பொருளைத் தொட்டு, உணரும்போது, மூளை அதை பிம்பமாக மாற்றும். இன்று அப்படி இல்லை; மின்னணு சாதனங்களின் வாயிலாக காட்சிகளாகவே மூளையில் பதிகிறது. இதனால், கவனச்சிதறல் நோய் அதிகம் ஏற்படுகிறது.

ஆயுர்வேதம்

நம்முடைய உடல் இயக்கத்திற்கு வாதமும், சுறுசுறுப்புக்கு பித்தமும், மிதமான தன்மைக்கு கபமும் காரணமாகிறது.

இதில் ஏற்படும் வேறுபாடுகள் தான் கவனச் சிதறல் நோய்க்கு காரணம் என்கிறது ஆயுர்வேதம்.

இது போன்ற குழந்தைகள் துாக்கமின்மையால் சிரமப்படுவர். இவர்களுக்கு, வாதத்தைக் குறைக்க கூடிய, ஷீரோ வஸ்தி, ஷீரோலோபம் போன்ற தலை, உடலுக்கு செய்யப்படும் எண்ணெய் சிகிச்சைகளால், வாதம் கட்டுப்பட்டு, அதீத சுறுசுறுப்பு குறையும்.

மனநல ஆலோசகர், செயல்வழி சிகிச்சை நிபுணர் ஆகியோருடன் இணைந்து இந்த சிகிச்சையை செய்யும்போது, மூளையில் இருந்து வருகிற, 'டோபமைன்' உட்பட நரம்பு செல்களுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களின் சுரப்பு சீராகும். உடல், மன அளவில் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும்.



டாக்டர் கு. சுடர்கொடி,ஆயுர்வேத மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார மையம், திருப்பூர். 9444854993 sudarkodi78@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us